வெள்ளி, 28 டிசம்பர், 2018

மூன்றாவது அணி ... சிறிய கட்சிகள் பெரிய மீனை .. அல்லது பாஜகவுக்கே உதவி செய்வது?

மத்தியபிரதேசத்தில் 50  தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 29 தொகுதிகளிலும்
வென்றவருக்கும் தோற்றவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்றது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. கர்நாடக குமாரசாமி பாணியில் 2019  இல் அமையவிருக்கும் புதிய மத்திய அரசையும் காவு கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த மூன்றாவது கோஷ்டி செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுவது இயல்பே.
ஆலஞ்சியார் : மூன்றாவது அணி..
முட்டாள்தனமான செயல் அதற்கு பாஜகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டுவிடலாம் .. மோடியை வீழ்த்தவேண்டுமென்று எண்ணுகிறவர்கள் இந்த நாட்டை பின்னோட்டு இழுத்து செல்லும் பாசிச பாஜகவை அப்புறபடுத்த வேண்டுமெனில் சில விட்டுவீழ்ச்சைகளை ஏற்கவேண்டும் ..
உ.பி.யில் அகிலேஷ் மாயவதியும் இணைந்து போட்டியிட்டாலும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  அதன் பலனை பாஜக கொண்டுபோகும் .. அதேவேளை காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டால் பாஜகவை ஏறக்குறைய துடைததெறியலாமென அரசியல் விமர்சகர்களும் உன்னிப்பாக கவனிப்பவர்களும் சொல்கிறார்கள் .. தெலுங்கானா முதல்வர் பாஜகவின் சிலிப்பராக செயல்பட துவங்கியிருக்கிறார் அவர் மம்தா மாயவதி அகிலேஷ் என அந்தந்த மாநில செல்வாக்குள்ளவர்களை .. காங்கிரஸோடு இணையாமல் தடுக்கும் முயற்சியாக செயல்படுகிறார் .. மோடிக்கு பாலில் பழம் விழுந்த கதையாக போகும்.

இன்றைய சூழலில் காங்கிரஸா பாஜகவா என்றால் நாட்டை நேசிக்கிறவர்கள் இந்த ஆட்சி செய்த கொடுமைகளை கண்டவர்கள் மனிதனை விட மாட்டை போற்றும் மதிகெட்டவர்களை விரட்டவேண்டுமென நினைப்பவர்கள் .. ஒரே இரவில் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு மக்களை வழிகேட்டில் நிறுத்தியதை கண்டு சினங்கொண்டவர்கள்.. நாட்டை சில முதலாளிக்கு தாரைவார்த்ததை கண்டு கோபம் கொண்டவர்கள்.. தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் சிறுதொழில்கள் நசுங்கி போனதை கண்டு துயரபட்டவர்கள்.. நாட்டை முன்னோட்டு கொண்டுசெல்வதாக கூறி .. 100 வருடம் பின்னோக்கி செலுத்தியவர்களை விரட்ட வேண்டுமென நினைப்பவர்கள் .. காங்கிரஸைதான் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென எண்ணுவார்கள் ..
..
நாட்டிற்கு மிகப்பெரிய கேடு மூன்றாவது அணி..
இருப்பதையும் இழந்து தெருவில் நிற்கிற நிலை வரும் இந்தியா சர்வாதிகார பிடியில் சிக்கி கடைசியில் சிதறுண்டுபோகும் ..
இந்த மூன்றாவது என்பதே இயற்கைக்கு மாறானது.. நன்மை தீமை .. சரி தவறு ..
ஆதரவு எதிர்ப்பு.. இரண்டை ஒரே நேர்கோட்டில் வைக்கிறோமென்று நாங்கள் நடுநிலையானவர்கள் என்று சொன்னால் குறித்துக்கொள்ளுங்கள் அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள் அயோக்கியர்கள் நாட்டின் கெடுதிகள் ..
..
எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: