சனி, 29 டிசம்பர், 2018

ரங்கராஜ் பாண்டேயின் தேசநலன்.. நடுநிலை.. தேசபக்தி.. எல்லாம் ஆரிய பார்ப்பன நலம் ...

ஆலஞ்சியார் : சின்னதம்பி பாட ஆரம்பிச்சுட்டான்.. 
பாண்டே "அண்ணன்"
மோடியை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் .. இதில் வியக்க ஒன்றுமில்லை பார்பனர்கள் பாஜகவின் முகமாய்தான் எப்போதுமிருப்பார்கள் .. தேசநலன் நடுநிலை தேசபக்தி என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை ஆரியர்நலன் பச்சையாக சொல்ல வேண்டுமெனில் பார்பனர்நலன் .. அவ்வளவுதான் ..
இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நேரடியாக அதிகாரத்தில் தலையிடும் அல்லது நடத்துகிற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் ..அதை இழக்க அவர்களென்ன மடையர்களா என்ன..?
பொய்யை ஆயுதமாக கொண்டு செயல்படுவதும் அதை பெரியளவில் விளம்பரம் மார்கெட்டிங் செய்வதும் ...இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவதும் நாம் பார்க்காததா.. ..
2ஜி என்ற ஒன்றை அது சட்டத்தின் முன் நிற்காதென அறிந்தும் ஒரு மாய எண்ணை மக்களிடம் சொல்லி தொடர்ந்து வலைப்பின்னி ..மார்கெட்டிங் செய்து ஆட்சிக்கு வந்தனர் .. இதோ குஜராத் போல இந்தியாவை மாற்றுவிடுவார் "அண்ணன் மோடி" என ஓயாமல் சொல்லி கடைசியில் குஜராத் பழைய வண்ணாரபேட்டை லெவலுக்கு இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியடைந்ததுதான் மிச்சம் ..

நாற்பதாண்டு செய்யாததை செய்தாராம் .. பொய் சொல்வதென்று முடிவெடுத்துவிட்ட பிறகு அடித்துவிட வேண்டியதுதானே என்ன செய்தாரென்று கேட்டால் காங்கிரஸ் மீதம் வைத்ததை முடிந்துவிட்டு மறக்காமல் போட்டோ எடுத்து வலைத்தளங்களில் "புரமோட்" செய்தால் அது மோடி ஆட்சி..
..
மோடி பதவியேற்ற ஐந்தாண்டுகளில் இதுவரை உயர்பதவிகளில் .. பார்பனர்களை தவிர மற்றவர்கள் 2% விழுக்காடு கூட நிரப்பபடவில்லை .. அனுசரனையாக இருப்பவர்களுக்கு கவர்னர் பதவி கூட கிடைக்கும் .. துணைவேந்தர் பதவிகளில் இந்த நான்காண்டில் நாடு முழுவதும் பார்பனர்களே நியமிக்கபட்டிருக்கிறார்கள் இதில் அவர்களை விட தகுதியும் அறிவும் படிப்பும் இருந்தவர்கள் வரிசைபடி பின்னில் இருந்தவர்களுக்கு வழங்கபட்டிருக்கிறது .. இப்போது சொல்லுங்கள் பாண்டே "அண்ணன் மோடி" என்று விளிப்பதில் தவறிருக்கிறதா என்ன..?
ஆர்எஸ்எஸ் என்பது பார்பனர்களுக்காக அவர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கபட்டதே தவிர நாட்டிலுள்ள பிற இந்துக்கள் என சொல்லபடுகிறவர்களுக்காக அல்ல அதன் தலைமைக்கு பார்பனரை தவிர யாரும் வரமுடியாது என்பது தான் உண்மை .. இந்திய அரசியலில் தொடர்ந்து தீர்மானிக்கிற சக்தியாக இருந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போது கூட
திரு.வி.பி.சிங் அவர்கள் தான் கொஞ்சமேனும் மறுதலித்தார் .. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடப்பிலாக்க கூடாதென மாணவரை தூண்டி தீக்குளிக்க செய்தபோதும் உறுதியோடு 29% விழுக்காடு பிற்படுத்தபட்ட ஏனைய சமூகமக்களுக்கு கிடைத்தது .. உடனே அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள் .. பார்பன விரோத போக்கை எந்த அரசு கொண்டிருந்தாலும் அது நீடிக்காமல் பார்த்துக்கொள்வார்கள் .. நீண்டநாட்களுக்கு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் வாய்ப்பு கிட்டியதும் முன்னெப்போதுமில்லாத அளவில் ஆடுகிறார்கள் ..நேரடியாகவே 97% விழுக்காடு மக்கள் பாதிக்கபடுவதும் .. குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே கோலோச்சுவதும் நாம் கண்டுவருகிறோம் .. சில விவரமறியாதவர்கள் பதவி பணத்திற்கு பேராசை கொண்டு ஒத்தூதுகிறார்கள் ..
..
இந்த நான்காட்டில் நாடு பின்னோக்கி சென்றதாக பொருளாதாரம் அறிந்தோர் முற்போக்காளர்கள் நாட்டின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்போர் இந்திய ஜனநாயகத்தின் மீது மதிப்புடையோர் கருதுகிறார்கள் .. பாண்டே போன்ற சொம்புகள் தான் இன்னமும் பாஜகவை மோசியை தூக்கிபிடிக்கிறார்கள் .. மக்கள் வெறுக்க தொடங்கிய ஒரு ஆட்சி பைத்தியக்காரத்தனமாக ஒரே இரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி .. இருந்ததையும் பிடிங்கி கொண்டு அலையவிட்ட அனுபவம் .. ₹2000 கோடி செலவில் உலகம் சுற்றி போட்டோவிற்கு போஸ் கொடுத்த பிரதமர் ..இன்னும் ..
மதகலவரமே நடக்கவில்லையென்ற "புளங்காதிம்" அடைகிறார் இதிலிருந்தே கலவரத்தை யார் நடத்துகிறார்களென புரிந்துகொள்ளலாம் .. அதிகாரபோதையில் மாட்டிற்காக மனிதனை அடித்தே கொல்கிற அவலநிலை .. மருத்துவமனைகளில் மனிதனை விட மாட்டிற்கே "விஷேச" கரிசனையோடு கவனிப்பும் நடந்தது அறுபதாண்டுகளில் இல்லைதானே..
..
இன்னும் ஐந்தாண்டு வாய்ப்பை கொடுத்தால் நூறாண்டு பின்னோக்கி நம்மை கொண்டு செல்வார்கள் .. மக்கள் வெறுக்க தொடங்கியவுடன் தங்கள் நடுநிலையென்ற முகமூடியை கழட்டிவைத்துவிட்டு பதற தொடங்கியிருக்கிறார்கள்
அவர்களுக்கு தெரியும் இருக்கிற வாய்ப்பை நழுவவிட்டால் இழப்பு அவர்களுக்குதானென்று ..அது பாண்டேவின் பேச்சில் தெரிகிறது ...
..
பதறுங்கள் கதறுங்கள் பாண்டே..
தூக்கியெறி தயாராகிவிட்டது இந்தியா
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: