திங்கள், 15 அக்டோபர், 2018

எம்.ஜே. அக்பர் ராஜினாமா? பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்..

பதவி ராஜினாமா tamil.oneindia.com - lakshmi-priya.:டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் புகார்களை பெண்கள், பிரபலங்கள் என அனைவரும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். இதனால் இந்தியாவே பரபரப்பான சூழலில் உள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம் ஜே அக்பர் தனக்கு பாலியல் சீண்டல் விடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த சிஎன்என் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மஜ்லியே புவே கம்ப் புகார் தெரிவித்துள்ளார்.
இவர் கூறுகையில், 2007-ஆம் ஆண்டு 18 வயதாக இருக்கும் போது ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதன் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே. அக்பர். அப்போது மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இடம்பெறவுள்ள செய்தி, படங்கள் குறித்து ஒப்புதல் பெற அக்பரின் அறைக்கு சென்றேன்.
அப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை. பின்னர் எனது இருக்கைக்கு வந்து தோள்பட்டையில் கையை வைத்து எனக்கு முத்தம் கொடுத்தார். மேலும் அவரது நாக்கை எனது வாய்க்குள் செலுத்தினார்.

 என்னால் எதையும் செய்யவில்லை என்று அந்த பெண் பத்திரிகையாளர் ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார். தகவல்கள் இது பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் அக்பர் மீது 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீ டூ மூலம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: