சின்னையா : VHPயில் RSS நியமித்த அனைத்து அதிகாரங்களும் பெற்ற ஆதியும் நானே அந்தமும் நானே என்கிறான் தொகாடியா. குஜராத் ராஜஸ்தான் போலீஸ் என்கவுன்டர் செய்யப் பார்க்கிறார்கள் என்கிறான்.
மோடி அமுக்கு ஷா வசுந்த்ரா சிந்தியாவை மறைமுகமாக சொல்கிறானோ?
VHP கஜானா அகில உலகப் பெரியதாம். சர்வ வல்லமை படைத்த அமுக்கு ஷா கண்பட்டுவிட்டதாக பேசிக்கிறாங்களாம். @ RSS கண் அசைவில் ஆட்சிக்கான அதிகாரப் போட்டியும் நடைபெறுகிறதாம். மோடி முகமூடி கிழிந்துவிட்டதாம். புதிய முகத்தை தேடுகிறதாம். சங்கி மடம்.
கடந்த குஜராத் தேர்தலில் திரைமறைவில் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அதனால் சங்கிகள் இவர் மீது கொலைவெறியில் இருப்பதாகவும் ஒரு தகவல்.
விகடன் :விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக பிரவீன் தொகாடியாக இருக்கிறார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக 2015 ஆம் ஆண்டு அவர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அவரை கைது செய்ய நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. அந்த வழக்கை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் போலீசார், கடந்த 15 ஆம் தேதி குஜராத் வந்தனர். வீட்டுக்கு போலீசார் வந்த போது தொகாடியா வீட்டில் இல்லை.
அதனால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் தொகாடியா கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். பிரவீன் தொகாடியாவை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் தனியார் மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர், உடல் நிலை தேறிய நிலையில் பிரவீன் தொகாடியா
பேசுகையில், ''ராமர் கோவில் விவாகரத்தில் என்னுடைய குரலை ஒடுக்கவும் என்னை
கொல்லவும் சதி நடக்கிறது. இந்துக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன்.
விவாசாயிகளுக்காக போராடுகிறேன். அதனால் பழைய வழக்குகள் தூசுதட்டப்படுகிறது.
இத்தகைய கைது நடவடிக்கைகளுக்கு நான் பயப்படவில்லை. நம்முடைய தொண்டர்கள்
அமைதி காக்க வேண்டும். நாட்டு நலனே நமக்கு முக்கியம். ஆனாலும், என்னை கொல்ல
நடக்கும் சதிவலைகளை வெளியே சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த சதியை
தீட்டியது யார் என்ற விபரங்களை உரிய நேரத்தில் தெரிவிப்பேன்'' என்று
குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பிரவீன் தொகாடியா குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருக்கிறது.
சிவசேனாவுக்கு சொந்தமான சாம்னா பத்திரிகையில், ''மத்தியில் பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து அத்வானி போன்ற தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொகாடியா கூறி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் மோசமான குற்றசாட்டுகள். இதற்கு மோடி அமித் ஷா ஆகியோர் பதில் சொல்ல வேண்டும். நீதித்துறையில் மத்திய அரசின் குறுக்கீடு இருப்பதாக உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியபோது, அவர்களை தேசவிரோதிகள் என்றும், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்றும் வர்ணித்தீர்கள். இப்போது, பிரவீன் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறீர்கள்?
இந்துத்வாவின் சின்னமாக விளங்கும் வீர சவார்க்கர், பால் தாக்கரே ஆகியோர் ஒருபோதும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தியதும் இல்லை. கண்ணீர் சிந்தியதும் இல்லை. ஆனால், பிரவீன் தொகாடியா கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போலீஸ் என்ற போர்வையில் அவரை நெருங்கியது யார்?
இந்துத்வா என்பது விளையாட்டோ அல்லது அரசியல் புரிவதற்கான களமோ அல்ல, தேசியக் கடமை. யாருக்காவும் எதற்காவும் அதை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று எழுதி இருக்கிறது.
VHP கஜானா அகில உலகப் பெரியதாம். சர்வ வல்லமை படைத்த அமுக்கு ஷா கண்பட்டுவிட்டதாக பேசிக்கிறாங்களாம். @ RSS கண் அசைவில் ஆட்சிக்கான அதிகாரப் போட்டியும் நடைபெறுகிறதாம். மோடி முகமூடி கிழிந்துவிட்டதாம். புதிய முகத்தை தேடுகிறதாம். சங்கி மடம்.
கடந்த குஜராத் தேர்தலில் திரைமறைவில் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அதனால் சங்கிகள் இவர் மீது கொலைவெறியில் இருப்பதாகவும் ஒரு தகவல்.
விகடன் :விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக பிரவீன் தொகாடியாக இருக்கிறார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக 2015 ஆம் ஆண்டு அவர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அவரை கைது செய்ய நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. அந்த வழக்கை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் போலீசார், கடந்த 15 ஆம் தேதி குஜராத் வந்தனர். வீட்டுக்கு போலீசார் வந்த போது தொகாடியா வீட்டில் இல்லை.
அதனால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் தொகாடியா கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். பிரவீன் தொகாடியாவை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் தனியார் மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரவீன் தொகாடியா குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருக்கிறது.
சிவசேனாவுக்கு சொந்தமான சாம்னா பத்திரிகையில், ''மத்தியில் பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து அத்வானி போன்ற தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொகாடியா கூறி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் மோசமான குற்றசாட்டுகள். இதற்கு மோடி அமித் ஷா ஆகியோர் பதில் சொல்ல வேண்டும். நீதித்துறையில் மத்திய அரசின் குறுக்கீடு இருப்பதாக உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியபோது, அவர்களை தேசவிரோதிகள் என்றும், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்றும் வர்ணித்தீர்கள். இப்போது, பிரவீன் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறீர்கள்?
இந்துத்வாவின் சின்னமாக விளங்கும் வீர சவார்க்கர், பால் தாக்கரே ஆகியோர் ஒருபோதும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தியதும் இல்லை. கண்ணீர் சிந்தியதும் இல்லை. ஆனால், பிரவீன் தொகாடியா கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போலீஸ் என்ற போர்வையில் அவரை நெருங்கியது யார்?
இந்துத்வா என்பது விளையாட்டோ அல்லது அரசியல் புரிவதற்கான களமோ அல்ல, தேசியக் கடமை. யாருக்காவும் எதற்காவும் அதை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று எழுதி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக