சீனா கட்டுப்பாட்டில் டோக்லாம்?
தினமலர் :புதுடில்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில், இந்தியா - சீனா இடையிலான பிரச்னை தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டபோதும், அப்பகுதியை, தன் முழு கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டின் சிக்கிம் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை உள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. தகவல் அறிந்ததும், நம் வீரர்கள் சென்று, அப்பணியை தடுத்து நிறுத்தினர்.இரு தரப்பு வீரர்களும், அங்கு, 72 நாட்களாக முகாமிட்டு இருந்தனர். இரு தரப்பு உயரதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், இரு நாடுகளின் வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர்.
சீனாக்காரன் கோவணத்தை உருவிக்கிட்டு போயிட்டான். அண்ணன் டோக்ளா தின்னுட்டு, வாயிலே வடை சுட்டுக்கிட்டு திரியிறார். அம்மிணி சுக்காய் விமானத்தில் "சாகசம்" செய்கிறாராம்.
இதனால், அங்கு, பதற்றம் தணிந்தது. ஆனால், சமீபகாலமாக வெளியாகும் தகவல்கள், டோக்லாம் பகுதியை சீனா முழுமையாக ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.கடந்தாண்டு டிசம்பரில், டோக்லாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், ஹெலிகாப்டர் இறங்க உதவும், ஏழு ஹெலிபேட்கள், 10 கான்கிரீட் நிலைகள், ஏராளமான கவச வாகனங்கள் காணப் படுவதை பார்க்க முடிவதாகவும், அங்கு, 1,800 சீன வீரர்கள் நிரந்தர முகாம்அமைத்துள்ள தாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அப்பகுதியில், மிகப்பெரிய கண்காணிப்பு கோபுரம் உள்ளதாகவும், அது, இரண்டு அடுக்கு கட்டட உயரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் முகாம் அமைந்துள்ள < பகுதியில் இருந்து வெகு அருகில், சீன ராணுவத்தின் கண்காணிப்பு கோபுரம் அமைக்க பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை எளிதில் தெரிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
சீன ராணுவம், டோக்லாம் பகுதியில் அத்துமீறி தளவாடங்களை நிர்மாணித்து வருவது, இந்திய ராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, ஆங்கில பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக