Olivannan Gopalakrishnan : :நேற்றைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த திரு. கோ. ஒளிவண்ணன் அவர்களின் விளக்கம்
இன்று காலை வாட்ஸ் அப் செய்தியொன்று நண்பர் ஒருவரால் எனக்கு
அனுப்பப்பட்டது. அதில் சென்னை புத்தகக் காட்சியில் நேற்று எங்களது புத்தக
வெளியீட்டு விழாவின் இடையே தகராறு நடந்ததாகவும் நிகழ்ச்சி பாதியில்
நிறுத்தப்பட்டதாகவும் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது . இது முற்றிலும்
தவறான செய்தி.
நிகழ்ச்சி குறித்த நேரத்தைக் கடந்து சென்றமையால் இறுதியில் ஏற்புரை வழங்கிய தமிழன் பிரசன்னா அவர்களை நான்தான் நேரம் கடந்து விட்டது, முடியுங்கள் என்று சீட்டு கொடுத்து முடித்தேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் அரை மணிநேரம் அங்கு தங்கியிருந்து புத்தகம் வாங்கியவர்களுக்கு கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்.
நான் கொண்டுள்ள கருத்துகளையும் கொள்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணித்தது இல்லை. அதுப் போல அழைக்கப்படும் பேச்சாளர்களிடம் அரங்கத்தின் கண்ணியம் காக்கும் வகையில் பேச அறிவுறுத்தப்படுகிறது. அப்படி வரம்பு மீறினால் இடைமறித்து தடை செய்யவும் தயங்கியதில்லை.
எங்களது நூற்பட்டியலை ஆராய்ந்தால் நாங்கள் எல்லா தரப்பு புத்தகங்களையும் வெளியிடுவது தெளிவாக புரியும்
இப்படியிருக்க எனக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான தகவல் பரப்புவது வேதனை அளிக்கிறது.
கோ. ஒளிவண்ணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக