வியாழன், 18 ஜனவரி, 2018

ஜிக்னேஷ் மேவானி ... விபசார டிவிக்களின் டிஆர்பி வெறிக்காகத்தான் ..ராஜ் டிவி ஷபீர் ஒரு ஊடாக மாமா?

0.jpgthetimestamil :விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள்.
பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று ஜிக்னேஷ் கூறுகிறார் (இதை அப்போது அங்கிருந்த எழுத்தாளர் சல்மா உட்பட பலரும் சுட்டிகாட்டியுள்ளனர்) இதற்கு அங்கிருந்த , குறிப்பாக ஆங்கில ஊடக நிருபர்கள் , அதிலும் குறிப்பாக டைம்ஸ் நவ் நிருபரான, தமிழகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தலைமையில்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதை  தன்னுடைய டிவிட்டரில், ஷபீரே பதிவு செய்திருக்கிறார் .

ரிபப்ளிக்  டிவி வெளியேறாவிட்டால்  பேட்டியளிக்க முடியாது  என்று ஜிக்னேஷ் சொல்ல, எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார் என்று ஷபீர் தலைமையிலான   நிருபர் கும்பல் தகராறு செய்ய, அங்கே களேபரம் ஆகி இருக்கிறது. பின் “உங்கள் பேட்டியை புறக்கணிக்கிறோம்” என்று இந்த நிருபர்கள் விலக, ஜிக்னேஷும்  கிளம்பிச் சென்று விட்டார்.   இந்த சம்பவம் ட்விட்டரில் தேசிய அளவில் trend ஆகிறது. அதை ஷேர் செய்து ஷபீர் புல்லரித்தும் கொள்கிறார் . இதையடுத்து “ஜிக்னேஷ் தீவிரவாதி,  பயங்கரவாதி” என்று மோடி ஆதரவாளர்கள் தாக்கத்தொடங்கி விட்டனர்.
அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை வெளியேற சொல்லி ஜிக்னேஷ் மட்டும்தான் சொல்லி இருக்கிறாரா ? என்றால், இல்லை…. ஜே.என்.யூ பல்கலை  மாணவி ஷேலா ரஷீத்,  காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர்,  சசி தரூர் என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. குறிப்பாக சஷி தரூர் விவகாரத்தில், அவரின் வீட்டின் முன்னே வேட்டையாடும் ஒரு நாயின் குரூரத்துடன் ரிபப்ளிக் டிவி காத்திருந்தது ஊரறிந்த சாட்சி. இதை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்ல, “சுனந்தா புஷ்கர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சஷி தரூரை எந்த ஒரு ஊடகமும் வற்புறுத்த முடியாது என்றும் அது தொடர்பாக அமைதியை கடைப்பிடிப்பது அவருடைய அடிப்படை உரிமை” என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீவிரவாத வலதுசாரித்தனத்தின்  அடிமையாக மாறியிருக்கும் அர்னாப், தன்னுடைய தொலைக்காட்சி மூலம் என்ன செய்கிறார்? இடதுசாரிகளை இந்தியத் துரோகிகளாக காட்சிப்படுத்துகிறார். இஸ்லாமியர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாகத் தொடர்ந்து முத்திரை குத்துகிறார்.  ஜேஎன்யூவின் இளம் தலைவரான ஷேலா ரஷீதை – காஷ்மீர் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றே ஒவ்வொரு முறையும், வசைபாடுகிறார். அவர்களின் செயல்கள் கவனத்தை ஈர்க்கும்போதேல்லாம், தன் விஷத்தை ரிபப்ளிக் என்கிற ஊடகத்தின் மூலம் கக்குகிறார் அர்னாப். குறைந்தபட்ச அறத்துடன், குறைந்தபட்ச மனிதத்துடன்  நடந்துகொள்பவர்கள் எப்படி அர்னாப் போன்ற ஒருவருக்கு ஆதரவாக நிற்க முடியும்.
குறிப்பாக,  தலித் புரட்சியாளர் என்ற வெளிச்சம் ஜிக்னேஷ் மேவானி  மீது விழத்தொடங்கியது முதலே  அவரை இழிபடுத்தி செய்திகளை வெளியிடுவதை முதல் வேலையாக வைத்திருக்கிறது ரிபப்ளிக் டிவி. சில நாட்களுக்கு முன் ஜிக்னேஷ், ஷேலா, மற்றுமொருவர் என்று மூன்று பேர் காபி அருந்தும் புகைப்படம் ஒன்றை, மோடி ஆதரவாளர்கள் கீழ்த்தரமாக போட்டோஷாப் செய்து வெளியிட, அதை தன்னுடைய டிவிட்டரின் பகிர்கிறது ரிபப்ளிக்.

இப்படி தனிப்பட்ட முறையிலான வன்மத்தை கக்கும் ரிபப்ளிக் தொலைக்கட்சியிடம் ஜிக்னேஷ் ஏன் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் ? ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க முடியாது என்று சொல்வது அவருடைய அடிப்படை உரிமை அல்லவா ???
“ஜெயாவிடம் இப்படி அதிகாரம் செய்ய முடியுமா” என்று டிவிட்டரில் ஒருவர், ஷபீரிடம் கேட்கிறார். அதற்கு “ஜெ, கரு” இருவரும் இப்படி மோசமாக (ஜிக்னேஷப் போல) நடந்துகொள்ள மாட்டார்கள்” என்று ஷபீர் பதில் அளிக்கிறார்.
ஜெ.வின் ஆட்சியில்  கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் மீது அதிமுக குண்டர்களால்  நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலும், குறிப்பாக ஜெயஸ்ரீ என்கிற பெண் நிருபரின் மண்டை உடைக்கப்பட்டதும்  ஷபீர் என்கிற முன்னாள் ராஜ் டிவி நிருபருக்கு கண்டிப்பாக தெரிந்தே இருக்கும்.
அவ்வளவு ஏன், ஊடகங்களை நோக்கி காரி துப்பிய விஜயகாந்தை இந்த நிருபர்களால் புறக்கணிக்க முடிந்தது. ஆனால், .”ஜெ.விடம் கேள்வி கேளுங்கள்”  என்று விஜயகாந்த் சொன்னதை செய்ய முடிந்ததா?
விஜயகாந்தின் கேள்வியையடுத்து  2015 dec.29-ம் தேதி தலைமைச் செயலக வாசலில் நிருபர்களும் காத்துக்கிடந்தார்கள்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றிய விகடன் செய்தியின் ஸ்க்ரீன் ஷாட் கீழே
Capture.JPG
இதுதான் ஜெயலலிதா. இது Silly-யான வேலையாக தெரியவில்லை போல ஷபீர் என்கிற முன்னாள் ராஜ் டிவி நிருபருக்கு.  அவ்வளவு ஏன்….  பிரபல தமிழ் தொலைகாட்சிகளின் தற்போதைய நிருபர்களின் பதிவுகளைப் படியுங்கள்…
Untitled.png
ஜெ.எப்போதுமே அதிகார பீடம்தான். ஆனால் டீ விற்று வாழ்க்கையில் முன்னேறியதாக தன்னை முன்னிறுத்தும் நம்முடைய பிரதமர் இந்த நான்கு வருடங்களில் எப்போதாவது ப்ரெஸ் மீட் என்ற ஒன்றை நடத்தி இருக்கிறாரா ? அல்லது அர்னாப் போன்ற அடிமையைத்தவிர வேறு யாரிடமாவது one to one உட்கார்ந்திருக்கிறாரா ??? இவர்களைக் கேள்வி கேட்க, இவர்கள் முன் solidarity காண்பிக்க என்றாவது ஷபீர் தலைமையிலான நிருபர் கும்பலுக்கு துணிவு உண்டா? ஜிக்னேஷ் மேவானி என்கிற தலித் தலைவருக்கு எதிராக மட்டும் இவர்கள் இப்படியான அதிகாரத் தொனியை காட்டுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாகத்தானே இருக்கிறது.
ஷபீர் அஹமத் என்கிற ஒரு செய்தியாளர் தமிழ்நாடு போன்ற பெரியாரின் மண்ணில் இருப்பதால்தான் அவர் இன்னமும் இஸ்லாமிய தீவிரவாதியாக காட்சிப்படுத்தப்படாமல் இருக்கிறார். இதுவே அவர் வடமாநிலத்தில் பிறந்திருந்து, அமீத் ஷாவையோ அல்லது ஷாவின் வீட்டு நாயை விமர்சித்திருந்தால் கூட “பாகிஸ்தானுக்கு” நாடு கடத்தப்பட்டிருப்பார்.
இஸ்லாமிய இனத்துக்கெதிராக, ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு எதிராக  விஷமழை பொழிந்து கொண்டிருக்கும் அர்னாபின் தொலைக்காட்சியை கண்டித்து , அதே விஷத்தை தங்கள் தலையில் ஏற்றி பாம்புக்குட்டிகளாக அலைந்து கொண்டிருக்கும் அர்னாபின் நிருபர் குழுவை கண்டித்துதானே இது போன்ற போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் ஷபீர்.
ஜிக்னேஷை புறக்கணித்ததாக காலர் தூக்கி விட்டு எக்காளமிடும் ஷபீர் போன்ற நிருபர்களிடம் நினைவுபடுத்த….
“பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை”
என்கிற martin niemöller-ன் கவிதை எப்போதும் கைவசம் இருக்கிறது. நீதிபதிகளே மக்கள் முன் வரும் காலமிது. நீங்கள் இறங்கி வரும்போது உங்களுக்காக பேசுவதற்கு யாருமில்லாத ஒரு சூழலையே நீங்கள் உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்.
அதற்கு முன்,  உங்களின் டிஆர்பி வெறிக்காகத்தான் ஜிக்னேஷ். அவரின் வெற்றிகளுக்கு  சிறுதுளி அளவு கூட உங்களுக்குப்  பங்கில்லை என்பதை  புரிந்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை: