Mathi - Oneindia Tamil
ரஜினியுடன் கூட்டு என்ற பா.ஜ .க.வின் திட்டத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி
சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலின் பின்னணியை பட்டவர்த்தனமாக துக்ளக்
ஆசிரியர் குருமூர்த்தி போட்டுடைத்திருப்பதுதான் அரசியல் அரங்கத்தில் ஹாட்
டாபிக்.
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே
பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' இந்துத்துவா
அரசியலாகப் பார்க்கப்பட்டது.
ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் மீது நேர்மை, தூய்மை என போர்வை போர்த்திப்
பார்த்தார். ஆனால் ராமகிருஷ்ணா மடத்துக்கு முதலில் சென்றபோதே அவர்
முன்வைக்கும் ஆன்மீக அரசியல் இந்துத்துவா அரசியல்தா என்பது அப்பட்டமானது.
பாஜக மீதே சந்தேகம்
பாஜக மீதே சந்தேகம்
அதன்பின்னரும் ஆன்மீகம், அரசியல், ஆன்மா குறித்து 'தத்துவ' விளக்கம் தந்து
வருகிறார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினிகாந்தை களமிறக்கி அவருடன் பாஜக
கைகோர்க்க முயற்சிக்கிறது என்பதுதான் அரசியல் அரங்கத்தின் பேசுபொருளாக
இருந்தது.
திராவிட அரசியல்
திராவிட அரசியல்
எந்த ஒரு அரசியலும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத நிலையில் அதன் இருப்பு
என்பது கேள்விக்குள்ளாக்கப்படும். திராவிட அரசியல் என்னதான் அடுத்த
தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தாலும் வலிமை மிக்கதாக இல்லை என்பதை
நாடறியும்.
திமுக அதிமுக
திமுக அதிமுக
திராவிட அரசியலின் ஒற்றை முகமாக பார்க்கப்படும் திமுக தலைவர் கருணாநிதி
முதுமையால் உடல்நலம் குன்றியிருக்கிறார். மறுபக்கம் இன்னொரு திராவிட
அரசியல் கட்சியான அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா உயிருடன் இல்லை. இப்போது
அதிமுக என்பது பாஜகவாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
திராவிட அரசியலுக்கு செக்
திராவிட அரசியலுக்கு செக்
இந்த சூழல்களைப் பயன்படுத்தி கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை பாஜக
முன்வைத்தது.
ஆனால் தமிழர் விரோத நடவடிக்கைகளால் பாஜக சொந்த முகத்தை
வைத்துக் கொண்டு இந்த மண்ணில் காலூன்ற முடியாது என்கிற யதார்த்தத்தை அந்த
கட்சியும் புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் குதித்திருக்கிறார். திராவிட கட்சிகளை கரைத்து ரஜினியுடன் இணைய
வைத்து, பாஜக இங்கே காலூன்ற திட்டமிடுகிறது என விவாதங்களில் பேசப்பட்டு
வந்தது. ரஜினியும் பாஜகவும் இணைகின்ற போது திராவிட அரசியல் இங்கே
கேள்விக்குறியாகும் என அரசியல் வல்லுநர்கள் கூறிவந்தனர்.
தலையெழுத்து மாறும்
தலையெழுத்து மாறும்
இந்த ஆரூடங்கள் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார் துக்ளக் ஆசிரியர்
குருமூர்த்தி. சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி,
பாஜகவும் ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்
என தெரிவித்திருக்கிறார். இதுதான் பாஜகவின் எதிர்கால திட்டம் என்பதை
வெளிப்படையாகவே குருமூர்த்தி சுட்டிக்காட்டியிருப்பது திராவிட அரசியலுக்கு
விடப்பட்ட எச்சரிக்கை என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக