சனி, 20 ஜனவரி, 2018

இந்தியாவில் முதலீடு: மொரீஷியஸ் முதலிடம்! இந்திய காபறேட்டுகளின் கறுப்புப்பணம் ...

இந்தியாவில் முதலீடு: மொரீஷியஸ் முதலிடம்!மின்னம்பலம் :இந்தியாவில் அதிகமாக முதலீடுகள் மேற்கொள்ளும் நாடுகளில் மொரீஷியஸ் முதலிடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் சென்செஸ் கணக்கீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டில் இந்திய நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் பற்றிய ஆய்வு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தம் 18,667 நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சென்செஸ் கணக்கீட்டில், 17,020 நிறுவனங்களில் அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவற்றின் பேலன்ஸ் ஷீட்டுகள் (2017 மார்ச் வரை) வாயிலாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ள அதே நேரம் அந்நிய நாடுகளில் இந்நிறுவனங்கள் எவ்வித முதலீடுகளையும் மேற்கொள்ளவில்லை.

சந்தை மதிப்பில் 21.8 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள மொரீஷியஸ்தான் இந்தியாவில் அதிகளவில் முதலீடு மேற்கொண்ட நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கணிசமான அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் தொழில் புரியும் அந்நிய நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி அளவு 18.7 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது

கருத்துகள் இல்லை: