மின்னம்பலம் : சென்னைப்
புத்தகக் காட்சியில் கவனம்பெற்ற புத்தகங்கள் பட்டியலை ‘தி இந்து’ தமிழ்
நாளிதழ் நேற்று (ஜனவரி 17) வெளியிட்டது. இதில் பொருளாதார அறிஞர்
ஜெ.ஜெயரஞ்சன் எழுதி, மின்னம்பலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள
‘இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’ புத்தகம் முதலிடம் பெற்றுள்ளது.
41ஆவது புத்தகக் காட்சி சென்னையில் களைகட்டி வருகிறது. விடுமுறை நாள்கள் முடிந்தாலும் புத்தகங்கள் மேல் காதல் கொண்டவர்கள் தொடர்ந்து புத்தகக் காட்சியை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என பல்வேறு பிரிவுகளில் கருத்துச் செறிவுமிக்க ஏராளமான கட்டுரைகளை நமது மின்னம்பலம் இதழில் தினமும் வெளியிட்டு வருகிறோம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அரங்கு எண் 379 இல் இடம்பெற்றுள்ள நமது மின்னம்பலம் பதிப்பகப் புத்தகங்கள் பெரும்பாலான வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
ஒரு கோடி புத்தகங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் வாசகர்களின் கவனம்பெற்ற புத்தகங்களின் பட்டியலை தி இந்து நாளிதழ் வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட பட்டியலில் பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் எழுதி மின்னம்பலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’ புத்தகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. புத்தகம் வெளிவந்த சில நாள்களிலேயே மறுபதிப்பு வெளிவரும் அளவுக்கு வாசகர்கள் தேடி வந்து இந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக