மாலைமலர் :சென்னை,
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.
ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக