Oneindia Tamil Gajalakshmi :
டெல்லி
: தமிழக அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக
கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கார்வி நடத்திய
கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி 34 சதவீத
வாக்குகளை பெறும்ட என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஜெயலலிதா உயிரிழ்ந்து ஓராண்டு ஆகும் நிலையில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கும் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் ஆளும் அதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 68 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற முடியும் என்று முடிவுகள் வெளிவந்துள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இன்றைய அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் தேர்தல் களம் கண்டால் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் 34 சதவீத வாக்கு வங்கியை திமுக பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2016 சட்டசபை தேர்தலின் போது திமுக 88 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக