நீதிமன்ற
அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் 6 மாத காலம் சிறை
தண்டனைவிதித்ததையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன்
தலைமறைவானார். இந்த நிலையில் கர்ணன் திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கர்ணனை தேடும் பணிகளை கொல்கத்தா போலீசார் முடுக்கி
விட்டனர்.இந்நிலையில்.தெலுங்கான எஸ்டி, எஸ்இ, வழக்கறிஞர்கள் சங்கம்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இணைந்து நீதிபதி கர்ணன் மீதான புகார்கள் தவறு என்றும், கர்ணன் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் சென்னை பத்திரிக்கையளார் சங்கத்தில் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமறைவாக இருந்து வரும் நீதிபதி கர்ணன் வர இருப்பதாக தகவல் கிடைத்ததாக கொல்கத்தா போலீசார் திடீரென பத்திரிக்கையளார் சங்கத்திற்கு வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்த கட்சியினரிடம் கர்ணனை பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தனர். இருப்பினும் அவர்கள் சந்தேக கண்ணோட்டத்துடன் அங்கேயே காத்திருந்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியவுடன் புறப்பட்டுச் சென்றனர்.">படங்கள்: அசோக்குமார் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக