அரசு, ஆர்.எஸ்.எஸ்-இன் அடக்குமுறை தேடி வருவது நிச்சயம் என்ற நிலைமையில் இப்படி நக்கலைட்ஸ் நண்பர்கள் வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சிக்குரியது, வாழ்த்துக்கள்!
தமிழக அரசால் குண்டர் சட்டத்தில் கைது
செய்யப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தியோடு பாஜக ஊடக வித்வானை வைத்து
ரங்கராஜ் பாண்டே நடத்தும் விவாதம்தான் இந்தப் பகடிப் படம்.
பொதுவில் ஏட்டிக்குப் போட்டியென விவாதங்களை நடத்தும் பாண்டேயின் பாஜக சார்பு ஊரறிந்த விசயம். பாஜக வித்வான்களிடமும், வித்வான்களை எதிர்ப்போரிடமும் அவர் பேசும் விதத்திலேயே நமக்கு ஆத்திரம் வரும். தமிழ் நாட்டு அர்னாப் கோஸ்வாமியான பாண்டேயின் இந்த போக்கு அமெரிக்க ஃபாக்ஸ் டிவி வகையறாக்கள் உருவாக்கிய மிகப்பழைய உத்தி.
நடுநிலைமை என்ற பெயரில் காவிச்சார்பும், காவியை கேள்வி கேட்பதன் பெயரில் பாஜகவை எதிர்ப்போரை ஒடுக்குவதுமே பாண்டேக்களின் பாணி.
முன்பு சும்மானாச்சிக்கி பெயரில் இருந்த நண்பர்கள் தற்போது ‘நக்கலைட்ஸ்’ என்ற பெயரில் வெளயிட்டிருக்கும் வீடியோவில் பாண்டேயை முடிந்த அளவு அம்மணமாக்குகிறார்கள்.
தமிழில் நகைச்சுவை சானல்கள் அதிகம் தோன்றி வரும் நிலையில் பெரும்பாலானவை அரசியல் நிகழ்வுகளையும், தலைவர்களையும் பகடி செய்தாலும் அவை அரசியலற்ற முறையில் வெறும் வடிவம், தோற்றம் சார்ந்து சந்தானம் பாணியிலான பெயரளவு காமடியாக சரிந்து விடுகின்றன. இந்த சானல்களுக்கு பார்வைகளும், பின் தொடர்வோரும் அதிகம் என்றாலும் ‘சும்மானாட்சி’ நண்பர்கள் இது வரை வெளியிட்டிருக்கும் பகடிப் படங்கள் அனைத்தும் வெளிப்படையான அரசியலை பேசுகின்றன.
அந்த வெளிப்படையான அரசியலில் பாஜக – மோடியை எதிர்த்து பேசுவது என்பது ஒரு யூ டியூப் சானல் என்ற வகையில் எளிதானதல்ல. அரசு, ஆர்.எஸ்.எஸ்-இன் அடக்குமுறை தேடி வருவது நிச்சயம் என்ற நிலைமையில் இப்படி நக்கலைட்ஸ் நண்பர்கள் வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சிக்குரியது, வாழ்த்துக்கள்!
அரசியல் ரீதியில் நக்ஸலைட் எனும் பாரிய பொருளுடைய பெயரை டி ஆர் பாணியில் நக்கலைட்ஸ் என்று சானலின் பெயராக வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை. அடுத்து பாண்டேவைப் பற்றிய சித்திரம் இப்படத்தில் வெகு மலிவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது பாண்டே எனும் ‘சர்வ இலட்சணம்’ பொருந்திய கார்ப்பரேட் ஊடக வில்லனை கட்ட வண்டி கைப்பிள்ளை போல காட்டுவது பலனளிக்குமா?
இப்படத்தில் வருவது போல பாண்டே ஆரம்பகாலங்களில் நடந்து கொண்டது உண்மைதான். இப்போது அதே சதித்தனத்தை கண்டுபிடிக்க முடியாத படி சற்றே நாசுக்கு சதித்தனங்களாக வளர்த்துக் கொண்டார். மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் அரசியல்ற்ற சிந்தனையே பாண்டேக்களின் பலம். ஆகவே பாண்டே பாஜகவை ஆதரிப்பதற்கு வைத்திருக்க்கும் அந்த பொதுப்புத்தி அடித்தளத்தை ஆய்வு செய்து இன்னும் வீரியமாக பாண்டேவையும், அந்த உரையாடலையும் சித்திரித்திருக்க வேண்டும் என்பது எமது பணிவான ஆலோசனை.
அரசியல் ரீதியில் நமது எதிரிகளை விமரிசிக்கும் போதும் கூட எதிரியே யோசித்திராத கோணத்தில் அவனது கருத்துக்களை நாம் தொகுக்கும் போது மட்டுமே எதிரியின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை அவர்களது சொந்த சிந்தனையின் மூலமாகக் கூட விடுவிக்க முடியும்.
நக்கலைட்ஸ் நண்பர்கள் தயாரித்திருக்கும் இப்படம் ஒத்த கருத்துள்ள தோழர்களுக்கு மட்டுமானது. மேலும் பாண்டேவின் விவாதங்களைப் பார்க்கும் தோழர்களுக்கு ஏற்படும் ரத்திக்கொதிப்பிற்கு நிகரான வீரியமான மருந்தாக இப்படம் இல்லை. வேறு வகையில் சொன்னால் பாண்டேக்களோ, இல்லை அர்னாப்புகளோ அவர்களது வாசகர் வட்டத்தை பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். தமது முகங்களை மறைக்கும் முகமூடிகளையும் திறமையாக மேம்படுத்துகிறார்கள். அதை உரிப்பதற்கு நம்மிடம் நவீனமான கத்தி வேண்டும்.
இருப்பினும் இப்படம் முடிந்த அளவு பாண்டேக்களை பட்டி பார்த்திருக்கிறது. இப்படி வெளிப்படையான அரசியலை மக்கள் நலன் நோக்கில் உரிய நேரத்தில் வெளியிட்டிருக்கும் ‘நக்கலைட்ஸ்’ நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! வினவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக