Sri Lanka today said it will release 42 Indian fishing boats held in its custody since 2015 on condition that they will never re-enter the country's territorial waters.
சென்னை: ''இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்; படகுகளையும் விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து, எதிர்க்கட்சியினர் கொடுத்த, கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதன் விபரம்:
தி.மு.க., - சாமி: தி.மு.க., ஆட்சியில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், ஓரிரு நாட்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்; அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படும். தற்போது, இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவது இல்லை. தமிழக மீனவர்களின், 143 விசைப்படகுகள், இலங்கை கடற்கரையில் சேதமடைந்து, கடலில் மூழ்கும் நிலையில் உள்ளன.
தமிழக மீனவர்களை காக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், தமிழக விவசாயிகளைப் போல, தமிழக மீனவர்களும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்., - பிரின்ஸ்: தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
காங்., ஆட்சியில், மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஜெயகுமார்: 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால், அவர்களை தாக்கக் கூடாது. அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, ஜெ., தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். அவர் ஆட்சியில் எடுக்கப்பட்ட, உறுதியான நடவடிக்கை காரணமாக, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததில்லை. தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கும்படி, பிரதமரை இரு முறை சந்தித்து, முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.
சமீபத்தில், பிரதமர் மோடி இலங்கை சென்ற போதும், முதல்வர் அவரை தொடர்பு கொண்டு, மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு, தமிழகம் வருவர். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும். மீனவர்களின் பாதுகாவலாக, தமிழக அரசு திகழ்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக