செவ்வாய், 13 ஜூன், 2017

பரிதி இளம்வழுதி ... எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் 5 முறை வெற்றி பெற்றவர்... எந்நன்றி கொன்றார்க்கும் ....


a.somasundaran ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தினகரன் அணியில் இணைந்தார் பரிதி இளம் வழுதி - திடுக்கிடும் செய்தி.
ஒரு தலித் இளைஞன் மீது திமுக என்ற கட்சி எவ்வளவு அன்பு வைத்திருந்தது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பரிதி இளம்வழுதியைத்தான் உதாரணம் காட்டி சொல்ல வேண்டும்.
எழும்பூர் தொகுதியை பரிதி இளம்வழுதிக்கே திமுக தாரை வார்த்துவிட்டது என்று சொல்லும்படிக்கு அந்த தொகுதியிலிருந்து மட்டும் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றார் பரிதி.
முதன்முதலில் திமுக இவரை வேட்பாளராக அறிவித்தபோது பரிதிக்கு வெறும் 25வயது தான் . எம்எல்ஏவாக , அமைச்சராக , திமுகவின் துணை பொது செயலாளராக என படிப்படியாக வளர்ந்தார் தான்.
2011 தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற ஜான் பாண்டியனால், எழும்பூரில் ஓட ஓட விரட்டப்பட்டு தாக்கப்பட்டார் பரிதி . ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக நின்று, பரிதியை ஜெயா கைது செய்தார் என்பது கூட சோகமான செய்தி அல்ல. அதே ஜெயாவிடம் பின்னாளில் போய் சேர்ந்தார் பரிதி என்பதும், இதற்கெல்லாம் பிறகு தான் பரிதி இருந்த அதே அதிமுகவோடு ஜான் பாண்டியன் கூட்டணியில் சேர்ந்தார் என்பதுதான் பெரும் சோகம்.

திமுகவில் இருந்தபோது பேண்ட் போட்டுக்கொண்டு தான் சட்டமன்றம் போவார் பரிதி. அவ்வளவு கம்பீரமாக , சுதந்திரமாக இருந்தவர், "காலமெல்லாம் அம்மாவின் காலடியில் இருக்க வந்தவன். அம்மாவை பிரதமராக்க என் உடல் பொருள் ஆவியை கொடுக்க வந்திருக்கிறேன்" என்றெல்லாம் சென்டிமெண்டாக பேசி ஒப்பேத்தி தான் அங்கே அரசியல் செய்ய்யும்படிக்கு ஆனது.
ஜெயா இறந்ததும் சிலர் கண்ணீருடன் போனபோது பரிதி மட்டும் நம்ம பன்னீருடன் போனார், அந்தப்பரிதி இப்போது , லெக் ஸ்லிப்பாகி தினகரனிடம் போய் மெர்ஜ் ஆகி விட்டார்.
இவரை 28 ஆண்டு காலம் எம்எல்ஏவாக , அமைச்சராக, திமுகவின் துணை பொது செயலாளராக வைத்து அழகு பார்த்து, வீர அபிமன்யு , இந்திரஜித் என்றெல்லாம் புகழ்ந்து உச்சி மோர்ந்த கலைஞருக்கு இப்போது நடக்கும் இந்த கருமமெல்லாம் தெரியாமல் இருப்பதே நலம். இல்லையெனில் , தன்னிடம் இருக்கும்போது ஜல்லிக்கட்டு காளையாக இருந்த பரிதி இப்போது அடிமாடாக போனதை நினைத்து அவர் குலைந்து போவார்.
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி.
- சூரிய தேவன்

கருத்துகள் இல்லை: