இசையமைப்பாளர்
இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய
கலைஞர்கள் மற்றும் பாடகர்-பாடகிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நேற்று செய்திருந்தார். இந்த சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள்./> இந்நிகழ்வில் இசை உலகம் மாறி வருவதை பற்றி பேசியிருந்தார். அந்நிகழ்வு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். அப்பதிவில், நான் இசையமைக்க வந்து நாற்பது வருட காலம் நடந்துவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது இந்த உலகில், இந்தப் பேரண்டத்தில் நடக்கப்போவதில்லை. அந்த காலகட்டம் முடிந்துபோய்விட்டது. சிரிக்கவேண்டிய விஷயம் இல்லை இது. Musicians இல்லன்னு அர்த்தம். Music போட்றவங்க,Music வாசிக்கிறவங்க,பாடுறவங்க இல்லன்னு அர்த்தம். சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம். சினிமாவுல வந்து கையக் கால ஆட்டுற மாதிரி. Fight பண்றவன் Fight’டா பண்றான்? அது மாதிரி இங்க பாடுறவனும் பாடப்போறதில்ல. ஏன்னா Tune இல்ல. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது.எத்தனை ராகங்கள்,எத்தனை கலப்புகள்,எத்தனை உணர்வுகள்,எத்தனை Emotions,எவ்வளவு வாத்தியக்கருவிகள்,வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனை வகையான பாவங்கள் எல்லாம் போயிடுச்சு. திருப்பதிக்குப் போயிட்டு மொட்டை அடிச்சுட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தமாதிரி இப்போது இசையுலகத்தில் Musicians கிடையாது என்று ஆயிடுச்சு! எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் இளையராஜாவுடன் ஆரம்பகாலத்தில் இருந்து பணியாற்றிய பாடகர் பாடகிகள் மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசினார்கள். minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக