mathi.
சென்னை:
அதிமுக சசிகலா கோஷ்டியிடம் சரணாகதி அடைந்து பெட்டி பெட்டியாக கோடி கோடியாக
லஞ்சம் வாங்கிவிட்டு ரொம்பவும் 'நேர்மையாளர்கள்' போல கூவத்தூர்
ரிசார்ட்டில் உதார்விட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் மீண்டும்
கோபக்கனலை கொட்டி வருகின்றனர்.
கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவின் பிடியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிமைகள் போல அடைந்து கிடந்தனர். அப்போது கூவத்தூரில் டேரா போட்ட அத்தனை அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொகுதிகளுக்குள் எந்த ஒரு எம்.எல்.ஏவுமே நுழையவே முடியாத நிலை உருவாகி இருந்தது. அதிமுக தொண்டர்கள் கூட இந்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஓபிஎஸ் பக்கம் சாரை சாரையாக போனார்கள் திமுக மீது பழி< அப்போது நியாயவான்கள் போல பேசிய அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுகவின் சதியை முறியடிக்கவே சின்னம்மா சசிகலாவுடன் இருக்கிறோம் என மாய்மால வார்த்தைகளை கூறி அதிமுக தொண்டர்களை திசை திருப்ப பார்த்தனர்.
ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த அதிமுக தொண்டர்கள் பலரும் கட்சியை விட்டே வெளியேறிவிட்டனர். அதேபோல் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பிடித்து வைத்த ஒன்றைப் போல வாய்பொத்தி அமைதியாக 'ஞானிகளை' போல அதிமுக எம்.எல்.ஏக்கள் கப்சிப்பென்று இருந்தனர்.
அப்போதும் திமுகவினர் ரகளை செய்வார்கள் எனத் தெரிந்தேதான் இப்படி இருந்தோம் என ஜால்ஜால்ப்பு சொன்னவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள். ஆனால் சசிகலா கோஷ்டியிடம் பல கோடி ரூபாய் பணத்தையும் தங்கத்தையும் பெட்டி பெட்டியாக வாங்கி அமுக்கிக் கொண்டுதான் உத்தமசீலர்களைப் போல அதிமுக எம்.எல்.ஏக்கள் காட்டிக் கொண்டனர்.
அதுவும் கூவத்தூர் ரிசார்ட்டில் இரண்டு இரண்டு பேராக வெளியே வந்து, நாங்கள் நேர்மையின் சிகரம்; சுதந்திர மனிதர்கள்; எங்களை எவரும் அடைத்து எல்லாம் வைக்கவில்லை என ஒப்பாரி வைத்துவிட்டுப் போனார்கள். இந்த உதார்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் பின்னால் இத்தனை கோடி ரூபாய் பேரம் நடந்திருப்பதை கூவத்தூரில் கும்மியடித்த எம்.எல்.ஏ.க்களே அம்பலப்படுத்திவிட்டனர் இப்போது. இதனால் மீண்டும் சசிகலா கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கடும் கோபத்தை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக