மாடுகளை இறைச்சிக்காக விற்பதைத் தடுக்கும் மத்திய அரசின் உத்தரவுக்குத் தமிழகத்தில் அநேக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி.
நேற்று ஜூன் 15ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “புத்தர் காலத்திலே இருந்து பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பசுவதை தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி வருகிறது. பசுக்களைப் பொறுத்தமட்டிலும் அவை பாலுக்காகவும், விவசாயத்துக்காகவும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். அவை இறைச்சிக்காகப் பயன்படுத்தப்பட கூடாது என்று பெரிய அளவில் இயக்கமே இந்தியாவில் நடந்து வந்திருக்கிறது. எனவே, மத்திய அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது” என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
இந்த விஷயத்தில் மத்திய அரசு புத்தரின் வழியில் செயல்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் கிருஷ்ணசாமி மின்னம்பலம் திருவோடுதான் பாக்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக