நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கை வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் ஜூலை 11ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்தது.
இந்நிலையில் நேற்று தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசப்பட்டதாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசப்பட்டதில் பெருமளவு கருப்புப் பணம், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் இது குறித்து தீவிர புலன்விசாரணை செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஜூலை 11ஆம் தேதி வரை பொருத்து கொள்ள முடியாது. எனவே வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.
இதையடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்று, உரிய ஆதாரங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக