புதன், 14 ஜூன், 2017

CM நாராயணசாமி : கிரண்பேடி குற்றத்தை நிருபிக்க வேண்டும்! இல்லையேல் மன்னிப்பு கேட்கவேண்டும் ..


மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அரசு மீது துணை நிலை ஆளுநர் கிரண்பெடி கூறிய  ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அதற்காக கிரண்பேடி மன்னிப்பு கேட்கவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-.>மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அரசு மீது துணை நிலை ஆளுநர் கிரண்பெடி கூறிய  ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அதற்காக கிரண்பேடி மன்னிப்பு கேட்கவேண்டும். கல்வி கட்டணம் தொடர்பாக பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாகவே நடைபெற்றது.


71 இடங்களை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதாக தெரிவித்தார். 71 இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தாரை வார்த்தாக கூறும் துணைநிலை ஆளுநர் அதை நிரூபிக்க முடியுமா?இதற்காக பகிரங்க சவால் விடுகின்றேன். முடியாத பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநர் செயலர் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் திட்டமிட்டு மனு செய்துள்ளார். அவர் பின்னணியில் துணைநிலை ஆளுநர் உள்ளதாக தெரிகின்றது. ஆனால் அரசின் செயலாளரான அவர், துறைக்கும், அமைச்சருக்கும் முதல்வருக்கும் தெரியாமல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அரசை கலக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் எனக்கூறி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்.  துணைநிலை ஆளுநர் செயல்பாட்டால் மாணவர்கள் அவதியடையும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- சுந்தரபாண்டியன் நக்கீரன் 

கருத்துகள் இல்லை: