செவ்வாய், 13 ஜூன், 2017

ஓ.பி.எஸ் + பி.ஜே.பி அணியில் மத்திய அமைச்சராகி 500 கோடி வரை சம்பாதிக்க முடியும்... அதிமுக சரவணன்


சிகலா தரப்பில் இருந்தால் 2 கோடி ஐந்து கோடிகள் தான் சம்பாதிக்க முடியும். ஆனால் ஓ.பி.எஸ் அணியில் இருந்தால் பி.ஜே.பி கூட்டணியில் மத்திய அமைச்சராகி 500 கோடி வரை சம்பாதிக்க முடியும்” என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஓ.பி.எஸ் அணியில் எதிர்கால திட்டத்தை விளக்குவதை இரகசியமாக காமிராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள் மூன் டி.வி-யினர்.  சசிகாலாவை எதிர்ப்பதாலேயே ஓ.பி.எஸ்-ஐ ஏதோ புனிதர் போன்று தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் விதந்தோதிவருகின்றன. சசிகலா விட்டெறிந்த காசுக்கு விலைபோனவர்களாக பார்க்கப்படும் எடப்பாடி/சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை போல ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ க்களைக் காட்டுவதில்லை இவ்வூடகங்கள். சசிகாலாவை எதிர்ப்பதாலேயே ஓ.பி.எஸ்-ஐ ஏதோ புனிதர் என்று தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் விதந்தோதிவருகின்றன. சரவணனின் மேற்கண்ட பேட்டியையும் கூட சசிகலாவுக்கு எதிரான பகுதியை மட்டும் வெளியிட்டு “எம்.எல்.ஏ-களுக்கு 10 கோடி சரவணன் எம்.எல்.ஏ புகார்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது தினமலர். “ஓ.பி.எஸ் உறுதியளித்துவிட்டார்; இனி மத்திய அமைச்சர்; 500 கோடிகள்” என ஒருவர் திட்டமிடுவதை சசிகலாவுக்கு எதிரான புகாராக ‘செய்து’ வெளியிடுகிறது தினமலம்.

தினமலர் மட்டுமல்ல பல்வேறு ஊடகங்களும் சரவணண் பேசியதில் சசிகலாவுக்கு எதிராக பயன்படும் பகுதியை மட்டும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
சசிகலா ஊழல் பேர்வழி என தமிழக மக்களிடம் அம்பலப்பட்டுவிட்டார். சசிகால கூட அக்கியூஸ்டு 2 தான். அக்கியூஸ்டு 1 என குற்றம் நிரூபிக்கப்பட்டு செத்துப்போனதால் பரப்பன அக்ரகாரத்தில் தோழிக்கு கம்பெனி கொடுக்க முடியாமல் தப்பித்தவர் ஜெயா. இவர்களை தலைமையாகக் கொண்ட கட்சியில் எடுபிடி வேலை பார்த்து பொறுக்கித் தின்றவர்தான் ஓபிஎஸ்.
ஆனால் ஓ.பி.எஸ்-ஐ வைத்து அதிமுகவை கைப்பற்றலாம் என்று ஏற்றிவிட்டது பாஜக. அந்த திட்டத்தின்படி பன்னீர் செல்வத்தை சாந்தமான தலைவராக ஊடகங்களும் மார்கெட் செய்கின்றன. ஜெயா உயிருடன் இருந்த போதே தோட்டத்திற்கு கப்பம் கட்டுவதில் டிமிக்கி கொடுத்தவர் என வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்தான் இந்த ஓபிஎஸ். பாஜக திட்டப்படி அவர் மேடைக்கு வந்ததும் சசிகலாவை எதிர்க்கிறார். ஏற்கனவே அதிமுக ஊழல் கும்பலின் கோபத்தை சசிகலாமேல் வைத்திருக்கும் மக்களிடம் அது கொஞ்சம் எடுபடுகிறது.
அதை வைத்து 6 மாத ஆட்சியில் கிருஷ்ணா நீரை கொண்டு வந்தார், ஜல்லிக்கட்டுக்காக டெல்லி சென்று பேசினார் என்று படித்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் கூட பேசுவதை பார்க்கமுடிகிறது.
சேகர் ரெட்டியின் கூட்டாளியான ஓ.பி.எஸ்-ன் இமேஜை வளர்த்துவிடுவதில் பார்ப்பன ஊடகங்கள் முன் நிற்கிறார்கள். தமிழக விவசாயிகள், எதிர்கட்சி தலைவர் யாரையும் சந்திக்க மறுக்கும் பிரதமர் மாதாந்திரம் ஓ.பி.எஸ்-ஐ சந்திக்கிறார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஓ.பி.எஸ் அணியினர் பணம் கொடுத்தார்கள் என்பதும், சசிகலாவை எதிர்ப்பதன் நோக்கம் பா.ஜ.க கூட்டணி, அதிக கொள்ளை , கட்டப்பஞ்சாயத்து தகராறு என்பதும் அவர்கள் வாயாலேயே சொல்லியிருக்கிறார்கள். இது தான் முதன்மையான விசயம்.

மேலும் இந்த வீடியோவை பாஜகவே கூட செட்டப் செய்து எடுத்து ஊடகங்களுக்கு கொடுத்திருக்க முடியும். கன்டெய்னர் லாரியையே பாதுகாப்பாக அனுப்பி வைத்து வழக்கை ஒன்றுமே இல்லாமல் மூடிய மோடி அரசு ஊழலுக்கு எதிராக பொங்குகிறது என்பது உலக மகா பொய். அடுத்து ஜெயா கட்சியில் அனைவரும் ஊழல் பெருச்சாளிகள் எனும் போது சேகர் ரெட்டியை பினாமியாகக் கொண்ட முழுத்திருடர் ஓபிஎஸ்-ஐ உலக மகா உத்தமர் என்றால் இதை விட தமிழகத்திற்கு வேறு என்ன அவமானம் வேண்டும்?

கருத்துகள் இல்லை: