சனி, 17 ஜூன், 2017

பன்னீர்செல்வம் ஸ்பாட் பேமென்ட் அதான் சுவர் ஏறி குதிச்சேன் .. சாக்கடை செல்வம்?

Prakash JP'. இதுவா... ஓபிஎஸ் உங்க "தர்ம" யுத்தம்?? நீங்கள் பன்னீரல்ல சாக்கடை.....
டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ரகசிய வீடியோவில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சரவணன் பேசியதின் முக்கிய சாராம்சம்.....
*அம்மாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை மர்மமும் இல்லை அதை எங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டோம்.
*அம்மாவின் மரணம் குறித்து செய்வது எல்லாம் வெறும் அரசியல் தான்.
* கூவத்தூரில் சசிகலா தரப்புல இருந்து யாரும் நேரடியாக வந்து எங்களுக்கு பணம் தருகிறோம் என்று சொல்லவில்லை எங்களுக்குள்ளையே 2, 4, 6 கோடின்னு பேசிகிட்டோம்.
*ஓபிஎஸ் சைடில் இருந்து ஸ்பாட் பேமண்ட் ஒரு கோடி ரூபாய் தருகிறோம். வந்து எங்க தர்மயுத்தத்துல கலந்துக்குங்க தம்பின்னு சொன்னானுங்க.
*அதானால தான் தேவையில்லாம சுவர் ஏறி குதித்து வர வேண்டியதா போச்சு
*அணி தாவுவதற்காக OPS யிடம் ரூ.2 கோடி வாங்கியுள்ளேன்.
*மாஃபா பாண்டியராஜனுக்கு 25 கோடி ரூபாயும், ஒரு வீடும் OPS ஆல் கொடுக்கப்பட்டது.
*சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீது பொய் புகாரை பன்னீர் கொடுக்கச் சொன்னபோது, ரெண்டு பிட்டு கூட சேர்த்து புகார் கொடுங்க என கே பி முனிசாமி, நத்தம் விசுவநாதன் சொன்னார்கள்.

*பக்கம் பக்கமாக புகாரை அவர்களாகவே டைப் செய்துக் கொண்டார்கள். புகாரில் என்ன இருந்தது என்பது கூட எனக்குத் தெரியாது.
*பொய் புகாரை காவல்துறையிடம் அளித்தேன். அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிவுரையின் பெயரில் ADGP என்னிடம் பெற்றுக்கொண்டார்.
*சசிகலாவை பெங்களூருக்கு அனுப்பாமல், இங்கேயே கைது செய்து பிணையில் வராமல், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டம்.
* பொன்னையன், கே பி முனுசாமி, நத்தம் விசுவநாதன், பி ஹெச் பாண்டியன், மைத்ரேயன் எல்லாம் அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவங்க. விலை கொடுத்து பன்னீர்செல்வம் எங்களை இழுத்த பின்னர் தான் அவர்களின் அணிக்கே பலம் கூடியது.
*வீரனே , கட்டுக்கடங்காத காளையே என்றெல்லாம் எனக்கு கட் அவுட் வைத்தார்கள். எனக்கே வெட்கமா போய்டுச்சு. முட்டாள் பசங்க எல்லாத்தையும் நம்பிட்டானுங்க.
*அம்மாவின் மரணம் இயற்கையானது தான். அதை வைத்து பிரச்சாரம் செய்வது தானே அரசியல்
*கூவத்தூரிலிருந்த MLAகளுக்கு பொதுமக்கள் என்ற பெயரில் போன் செய்தது எல்லாம் திமுக வினர் தான்.
"RK நகர் தேர்தல் நிறுத்தப்படும் என டெல்லியிலிருந்து எங்களுக்கு முன்பே தகவல் வந்தது.

கருத்துகள் இல்லை: