வெள்ளி, 16 ஜூன், 2017

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு -நித்தியானந்தா சீடர்களை விரட்டி அடித்த போலீசார்


திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலை உச்சியில் நித்தியானந்தம் அண்ணாமலையார் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை ஆக்ரமிக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள் நித்தியானந்தாவின் சீடர்கள். சி.பி.எம். மற்றும் மக்கள் இணைந்து அதை தடுத்து வருகின்றனர். ரஞ்சிதா பிரச்சனைக்கு பின் அடங்கியிருந்த நித்தி, கடந்த வாரம் தனது ஆண், பெண் சீடர்களை அனுப்பி பவழக்குன்றை ஆக்ரமிக்க வைத்தார். இதனை சி.பி.எம். கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் உத்தரவுப்படி கோட்டாச்சியர் உமாமகேஸ்வரி ஆக்ரமிக்கப்பட்ட இடத்துக்கு போலீஸாருடன் வந்து நித்தி சீடர்களுடன் பேசினார். காலி செய்ய முடியாது என்றவர்கள், கோட்டாச்சியரை ஒருமையில் பேசி, சாபம் விட்டனர். இதை செய்தியாளர்கள் படம் பிடிக்க அவர்களுக்கும் சாபம் விட்டனர். அசிங்கமாக அர்ச்சனை செய்தனர். இறுதியில் காவல்துறை சிலைகளை அப்புறப்படுத்தியது. நித்தி சீடர்களை விரட்டியது. ராஜா நக்கீரன்

கருத்துகள் இல்லை: