மதுரை: வைகை அணையில் நீர் ஆவியாகாமல் இருப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகள், ‛தெர்மோகோல்' மிதக்க விட்டனர்; இந்த கூத்து, சர்வதேச அளவில் பெரும் நகைப்புக்கு உள்ளானது.
மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர், 'தெர்மோகோல் திட்டம்' குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு பதில் அனுப்பியுள்ளது.
திட்டத்தின் மதிப்பு குறித்த கேள்விக்கு, 'திட்டம் ஏதும் தயார் செய்யப்படவில்லை; 60 தெர்மோகோல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன' என பதில் அளித்துள்ளது.
இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அதிகாரியின் பெயரை கேட்டதற்கு, 'முன்னின்று நடத்திய அலுவலர் எவருமில்லை' எனவும், 'வேறு அணைகளில் இதுபோன்ற திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'இது சம்பந்தமான விபரம் இல்லை' எனவும், பதில் அளித்துள்ளது. தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக