ஞாயிறு, 11 ஜூன், 2017

மேகலாயா பாஜக உடைந்தது ... 5000 மேற்ற்பட்டவர்கள் விலகினர்


கால்நடைகள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கட்யிலிருந்து விலகியுள்ளனர். கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. தற்போது பா.ஜ. கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலய மாநில பா.ஜ.க தலைவர் பெர்னாடு மாரக் ஜூன் 1-ஆம் தேதி கட்சியிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து பேசிய அவர், 'பா.ஜ.க பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பழங்குடியின மக்களுக்கென்று தனிச்சட்டங்கள் இருக்கின்றன. பா.ஜ.க 'இந்துத்துவாவை' திணிக்க முயற்சி செய்கிறது' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மேகாலயாவில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து இன்று வெளியேறினர். அவர்களும் மத்திய அரசின் முடிவு பழங்குடியின மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பா.ஜ.கவிலிருந்து வெளியேறியவர்கள் இன்று மாலை மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். tamiloneindia


கருத்துகள் இல்லை: