பயங்கரவாதத்துக்கு இந்தியா
அடிபணியாது: பிரதமர் உறுதி
புதுடில்லி,: டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ஆண்டுதோறும் தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலான, அவர்களின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும். கூட்டு பொறுப்பு: சமூக நீதி, கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை, நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும். வலிமையான சமுதாயமே, வலிமையான இந்தியாவை உறுதி செய்யும்; சமூக நீதியே, வலிமையான சமூகத்தை உருவாக்கும்.
நாட்டின் பணவீக்கம், 6 சதவீதத்துக்கு மேல் போகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முந்தைய அரசில், பணவீக்கம், இரட்டை இலக்கத்தை தாண்டி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய இலக்காக, 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும்.
பயங்கரவாதிகளை கவுரவப்படுத்தி பார்க்கும், ஒரு நாடு என்ன நாடாக இருக்க முடியும்? அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்கள், அண்டை நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள நாட்டில், என்ன மாதிரியான அரசு இருக்க முடியும்? அந்த நாட்டின் இரட்டை வேடத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் இந்தியா அடிபணியாது.
எல்.இ.டி., பல்புகளின் விலை, மத்திய அரசின் தலையீட்டால், 350 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும், எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதால், 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை, எரிசக்தி பயன்பாட்டில் மிச்சப்படுத்த முடியும்.
இந்த வகை பல்புகள், மின்சாரத்தை மட்டுமல்லாது கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கின்றன; இதனால் இவை,

பாக்.,கிற்கு கண்டனம்

எல்.இ.டி., பல்புகளால் சேமிப்பு
எல்.இ.டி., பல்புகளின் விலை, மத்திய அரசின் தலையீட்டால், 350 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும், எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதால், 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை, எரிசக்தி பயன்பாட்டில் மிச்சப்படுத்த முடியும்.
இந்த வகை பல்புகள், மின்சாரத்தை மட்டுமல்லாது கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கின்றன; இதனால் இவை,
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன. கடந்த, 100 நாட்களில் நாடு
முழுவதும், 50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல், 'காஸ்' இணைப்புகள்
தரப்பட்டுள்ளன.அடுத்த மூன்று ஆண்டுகளில், ஐந்து கோடி ஏழை
குடும்பங்களுக்கு சமையல், 'காஸ்' இணைப்பு வழங்க, இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் கணிக்க முடியும். நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாறும் வாய்ப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ளது.
வரி பயங்கரவாதத்திற்கு முடிவுநடுத்தர வர்க்கத்தினரை, போலீசாரை விட வரித்துறை அதிகாரிகளே அதிகம் துன்புறுத்துகின்றனர். இந்த வரி பயங்கரவாத நிலையை மாற்ற வேண்டும். இத பலுாசிஸ்தான் குறித்து பேசியது ஏன்< சுதந்திர தின உரையில், பாகிஸ்தானில் உள்ள பலுாசிஸ்தான், கில்கித் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நன்றியுணர்வை ஏற்பதாகவும், அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்; இதன் மூலம், பாகிஸ்தானுடனான, நீண்ட கால நிழல் சண்டையை, வேறு பரிமாணத்திற்கு, அவர் மாற்றியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்ஹான் வானியை, 'வீரத் தியாகி' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
டில்லியில் நடந்த பாக்., சுதந்திர தின விழாவில் பங்கேற்ற, அந்நாட்டின் துாதரக அதிகாரி அப்துல் பாசித், 'ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் விடுதலை போராட்டத்துக்கு, பாக்., ஆதரவு அளிக்கும்; அவர்களின் போராட்டத்தை நீண்ட காலம் ஒடுக்கி வைக்க முடியாது' என கூறி, சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பாக்.,கின் இந்த அடாவடி பேச்சுகளுக்கு, இந்திய அரசு தரப்பில் இதுவரை தக்க பதிலடி தரப்படாமல் இருந்தது. இந்நிலையில், டில்லியில், 70வது சுதந்திர தின விழாவில்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாக்., உடனான நிழல் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.பாகிஸ்தானின் பலுாசிஸ்தான், கில்கித் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் துயரங்கள் குறித்த மோடியின் பேச்சு, இந்திய தரப்பில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்தியுள்ளது. பலுாசிஸ்தானில், பாக்., ஆதிக்கத்தை எதிர்த்து, நீண்ட காலமாக போராட்டங்கள் நடக்கின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடுவோரை, இந்தியா ஆதரிப்பதாக, பாக்., குற்றம் சாட்டுகிறது.
இந்தியாவில், காஷ்மீர் விஷயத்தில் தலையிடுவது குறித்து, இந்தியா குற்றம் சாட்டினால், பலுாசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாக, குற்றம் சாட்டுவதே, பாக்., தரப்பு
பதிலாக இதுவரை இருந்து
வருகிறது. பாக்.,கின் குற்றச்சாட்டை மறுத்து வரும் மத்திய அரசு, குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை கேட்டால், தரும் நிலையில் பாக்., இல்லை.
கடந்த, 2009ல், இந்தியா - பாக்., நாடுகளின் பிரதமர்கள் சந்திப்புக்கு பின், கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'பலுாசிஸ்தான் மற்றும் பிற பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய, சில தகவல்கள், பாக்.,கிடம் உள்ளன' என, கூறப்பட்டிருந்தது.
கூட்டு அறிக்கை வெளியிடப்பட்ட பின், இந்திய பார்லிமென்டில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'கூட்டு அறிக்கையில், பலுாசிஸ்தான் பற்றிய குறிப்பை இடம்பெறச் செய்தது ஏன்' என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தால், இந்திய தரப்பில், தார்மீக ரீதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பாக்.,கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உருவானது.
இந்நிலையில், தன் சுதந்திர தின உரையில், பலுாசிஸ்தான் பற்றி பிரதமர் குறிப்பிட்டுள்ளதன் மூலம், இந்தியாவில், காஷ்மீர் விவகாரத்தில் பாக்., தலையிட்டால், அதற்கு பதிலடியாக, பாக்.,கில், பலுாசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடும், என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், காஷ்மீர் பிரச்னையை பாக்., கிளப்பினால், அதே வீரியத்தோடு, பலுாசிஸ்தான் பிரச்னையை, இந்தியா கிளப்ப முடியும் என்பதே இதன் அர்த்தம். இதனால், இரு நாடுகள் இடையே, புதிய அரசியல் விளையாட்டு துவங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com
ஜி.எஸ்.டி.,யால் வளர்ச்சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக