வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

SRM.பச்சமுத்து கொலை குற்றச்சாட்டில் விரைவில் கைது ..? வேந்தர் மூவீஸ் மதனின் தற்கொலை கடிதம் போலி?

சென்னை: நீதிபதிகளின் சரமாரி கேள்விகளுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினர் பதில் அளித்துள்ளார். இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும் தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.
பச்சமுத்துவின் பினாமியாக செயல்பட்டவர் இந்த மதன் என்பவர்.  SRM கல்வி குழுமங்களில்  சேர்வதற்கு  இவரை பிடித்துதான்  லட்சகணக்கில்  பெற்றோர்கள் லஞ்சம்  கொடுத்தனர்.  அந்த  திருட்டு பணத்தை  திரையுலகில்  முதலிட்டு   மேலும் இருவரும்  பணம் சம்பாதித்தனர். தற்போது வியாபர நஷ்டமோ அல்லது  வேறு ஏதாவது தொல்லைகளோ தெரியவில்லை. திடீரென்று மதனை காணவில்லை. அவர் காசி போயிட்டர்ந்னு ஒரு கதை விட்டார்கள். பின்பு அவரை தேடி போலீசும் அவரது படத்தை  இயக்கி வரும் லாரன்ஸ் ராகவேந்திராவும்   வடநாட்டுக்கு படை எடுத்தார்கள். ஒருவிதமான  முன்னேற்றமும்   ஏற்படவில்லை. இப்பொழுது  சந்தேகம் வலுத்து விட்டது. 
பச்சமுத்துவின்  வாக்கு மூலங்கள் மிகுந்த சந்தேகத்தை  கொடுக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனும்  முதல்வர்  ஜெயலலிதாவுடனும் நல்ல கொடுக்கல் வாங்கல்களை இவர் பேணி வருகிறார். கடந்த தேர்தலில் இறுதி நேரத்தில் தனது உடையார் சமுக வாக்குகளை அதிமுகவுக்கு பெற்று தந்ததால் அதிமுக வெற்றி பெற்றது என்பது இங்கு கவனிக்க தக்கது  



தினமணி.com

காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை வரும் 30ம் தேதிக்குள் ஆஜர்படுத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த மதன் கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப் படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை போலீஸôரின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. மாணவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சுகுமாரன், ரங்கபாஷ்யம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதுவரை இருவரையும் போலீசார் விசாரிக்கவில்லை.
சுகுமாரன் வெளிநாட்டில் இருப்பதாக கடந்த முறை தாக்கல் செய்த அதே அறிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர்; ரங்கபாஷ்யத்தை இதுவரை விசாரிக்கவில்லை. இந்த வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் வழக்கு ஒப்படைக்கப்படும்.
இந்த வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை வியாழக்கிழமை (ஆக.18) தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில், மதனின் தயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை வரும் 30ம் தேதிக்குள் ஆஜர்படுத்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, காவல்துறைக்கு இறுதிக்கெடு விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை: