சனி, 20 ஆகஸ்ட், 2016

அமெரிக்கா இந்திய வம்சாவளி எம்பியின் தேர்தல் மோசடி... தந்தைக்கு சிறை வாசம் ,,, ஜனநாயக கட்சியை சேர்ந்த அமி பேரா

Ami Bera's father was sentenced Thursday to a year and a day in ... In 2010 and 2012, Babulal Bera's son Amerish Babulal was a candidate for U.S. Congress. ...
நியூயார்க், அமெரிக்காவில் தேர்தல் நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளி எம்.பி.யின் தந்தைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி எம்.பி. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினராக இருப்பவர் அமரிஷ் அமி பெரா (வயது 51). இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே எம்.பி. இவர்தான். இவரது தந்தை பாபுலால் பாப் பெரா (83). இவர் 2009, 2011 தேர்தல்களின்போது, தன் மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு சட்டவிரோதமான முறையில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 726 டாலர் (சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி நடந்தது எப்படி? அமெரிக்க சட்டதிட்டப்படி 2009–ம் ஆண்டு தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு ஒருவர் 2 ஆயிரத்து 400 டாலரும், 2011 தேர்தலில் 2,500 டாலரும் தான் நிதி வழங்க முடியும். < ஆனால் பாபுலால் பாப் பெரா அதை மீறி, மொத்தம் 90 பேரிடம் சொல்லி, அவர்களது பெயரில் தன் மகனுக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 726 டாலர் தேர்தல் நிதியை தர வைத்து, பின்னர் அந்த நிதியை அவர், அவர்களுக்கு திரும்பத்தந்துள்ளார்.


தேர்தல் மோசடி வழக்கு

இது தொடர்பாக பெடரல் கோர்ட்டில் பாபுலால் பாப் பெரா மீது தேர்தல் நிதி மோசடி வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணையின்போது அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தன் மீதான தண்டனை தீர்ப்புக்கு முன்னதாக அவர் நீதிபதி டிராய் நுன்லேயிடம், ‘‘என் மனைவி இல்லாமல் நான் வாழ முடியாது. நான் இல்லாமல் என் மனைவி வாழ முடியாது. நான் என் மனைவியுடன் இருக்க அனுமதி வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

நிராகரிப்பு

ஆனால் நீதிபதி, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்பாடுகள் கணக்கீடுகளின் அடிப்படையில் இருந்து இருக்கிறது. இது அப்பாவித்தன்மைக்கு அப்பாற்பட்டது’’ என கருத்து கூறிவிட்டார்.

அத்துடன் வயது, உடல்நிலை அடிப்படையில் சிறைத்தண்டனை விதிக்காமல், 30 ஆயிரத்து 200 டாலர் அபராதம் மட்டுமே விதிக்குமாறு கேட்டிருந்த நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

ஓராண்டு சிறை

இறுதியில் பாபுலால் பாப் பெராவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அத்துடன் அவருக்கு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.67 லட்சம்) அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் 3 ஆண்டு காலத்துக்கு அவருக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போட்டி

நவம்பர் 8–ந் தேதி நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அமரிஷ் அமி பெரா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடுமையான போட்டியை எதிர்கொள்ள உள்ளார். இந்த நிலையில் தன் மீதான வழக்கின் விசாரணையை இழுத்துக்கொண்டே போக வேண்டாம் என்று கருதித்தான் பாபுலால் பாப் பெரா தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீர்ப்பு குறித்து அமரிஷ் அமி பெரா கருத்து தெரிவிக்கையில், ‘‘தான் செய்தது தவறு என்பதை என் அப்பா ஒப்புக்கொண்டுள்ளார். அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் மீது நான் வார்த்தைகளால் கூற இயலாத அளவுக்கு அன்பு வைத்திருக்கிறேன். இந்த தீர்ப்பு எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படியெல்லாம் பாதிக்குமோ என மனம் உடைந்து போய் உள்ளேன்’’ என கூறினார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: