குஜராத்தில் உனா நகரில் நடந்த சுதந்திர யாத்திரையின் முடிவில் நடந்த
பொதுக்கூட்டத்தில் ரோஹித் வெமுலாவின் தாய், ராதிகா வெமுலா கலந்துகொண்டு
கொடியேற்றி வைத்து பேசினார். அங்கே திரண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு சிறப்பு
நன்றி தெரிவித்த ராதிகா, “என் மகனுக்கு ஏற்பட்ட நிலையில் இன்னொரு
குழந்தைக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் இங்கே போராடுகிறேன். இந்த
நாடு நம் எல்லோருக்குமானது, குறிப்பிட்ட சாதிக்கோ,குறிப்பிட்ட மதத்துக்கோ
மட்டுமல்ல. பாபா சாகேப் கொடுத்த அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கு டாக்டர் அம்பேத்கரைப் போல கல்வி அளியுங்கள். அவர்களை
அடிமையாக்கிவிடாதீர்கள். என்னுடைய மகனுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.
ஆனால், நீங்கள் உங்கள் முதல்வரை நீக்கியதன் மூலம் சாதித்திருக்கிறீர்கள்.
அது மிகப் பெரும் சாதனைதான். என் உயிர் உள்ளவரை தலித்துகளுக்கான
உரிமைகளுக்காகப் போராடுவேன். ஜெய் குஜராத், ஜெய் பீம்!” என பேசினார்.thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக