புதன், 17 ஆகஸ்ட், 2016

தமிழக ஆளுநராக ரோசையாவே நீடிப்பார்... பன்னீர்செல்வத்தை எல்லாம் ஆளுநராக்க முடியாதுல?


சென்னை, தமிழ்நாட்டின் கவர்னராக கே.ரோசய்யா  கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பதவி ஏற்றார்.அவரது 5 ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதையடுத்து தமிழகத்தின் புதிய கவர்னராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரமூர்த்தி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்படலாம் என்று கடந்த வாரம் தகவல் வெளி யானது. ஆனால் தமிழ்நாட்டுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும்  இடையே காவிரி நதி நீர் பிரச்சினை இருப்பதால்  கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்துக்கு கவர்னராக நியமிப்பது சரியாக இருக்காது என்று கருதப்பட்டது. இதனால் சங்கர மூர்த்தியை தமிழக கவர்னராக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கை விட்டு விட்டதாக தெரிகிறது.
சங்கரமூர்த்தி தெலுங் கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


இதற்கிடையே தமிழக கவர்னர் ரோசய்யா மாற்றம் செய்யப்பட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்த ரோசய்யா தமிழக  அரசுடன் சுமூகமான உறவுடன் இருந்து வருகிறார்.குறிப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் அவர் 2011-ம் ஆண்டில் இருந்தே நல்ல நட்புடன் இருக்கிறார். எனவே ரோசய்யாவுக்கு கவர்னர் பதவியில் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா இது பற்றி பேசி முடித்து விட்டதாக தெரிகிறது. எனவே ரோசய்யா தமிழக கவர்னராக பதவி நீட்டிப்பு செய்யப்படுவது உறுதியாகி விட்டதாக இன்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: