வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் காரை நிறுத்திய காவலருக்கு சரமாரி அடி ..விடியோ ஆதாரம்


காசியாபாத்: வாசலில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா காரை நிறுத்திய காவலர்களை, அவரது உதவியாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பாதுகாவலர் ஒருவர் கூறுகையில், வாசல் கதவை திறக்க ஓரிரு நிமிடங்கள் தாமதமாகியுள்ளது. இதனால் அமைச்சர்களின் உதவியாளர்கள் எங்களை கடுமையாக தாக்கியும் கடுமையாகவும் திட்டியதாக கூறினார். நேற்று, ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, காசியாபாத்தில் உள்ள அஷினா கிரீன் குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரியை பார்த்து திரும்பும்போது, இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. அந்த வீடியோவில், குடியிருப்பு பாதுகாவலர்களை அமைச்சரின் உதவியாளர்கள் தாக்கியதும், திட்டுவதும் பதிவாகியுள்ளது.
பாதுகாவலர்களை கீழே தள்ளிவிட்டதும் அமைச்சரை ஏன் காக்க வைக்கிறீர்கள் என கேட்டு திட்டுவதும், உதவியாளர்களை மற்ற பாதுகாவலர்கள் தடுக்க முயன்ற போதும் அவர்களையும் உதவியாளர்கள் தாக்கியுள்ளதும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: சம்பவம் நடந்த போது அங்கு நான் இல்லை. இது பற்றி கேள்விபட்டதும், யார் மீது குற்றம் என ஆராயாமல் தாக்குதலுக்குள்ளான பாதுகாவலர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுள்ளேன். நான் அங்கு 100 முறை சென்றுள்ளேன். அமைச்சருக்குரிய பாதுகாப்பு விதிமுறைகள் பறறி எனக்கு தெரியும் என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: