சென்னை: அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் கட்சிப்பதவியை அதிரடியாக
பறித்து உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
எஸ்.பி.சண்முகநாதனின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் சசிகலா
புஷ்பா விவகாரம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய பேச்சினால் அதிமுகவில் எழுந்த புயல் இன்னும் ஓயவில்லை... அது சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமானவர்களை சுழன்றடித்து வருகிறது.
அதிமுகவில் சசிகலா புஷ்பா உடன் நெருக்கமாக இருந்தவர்களின் கட்சிப்பதவிகளை பறிக்கும் படலம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட் ஆக மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்.
சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர்
சசிகலா புஷ்பா. திருமணத்திற்குப் பின்னர் அதிமுக தலைமைக் கழகத்தில் வேலை பார்த்த பிலால் மூலம் மெல்ல மெல்ல கட்சியில் வளர்ந்தார்
சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது பாலியல் புகார் சொல்லி இருக்கும் பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் தங்களை சசிகலா புஷ்பா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியதே சண்முகநாதன்தான் என்று ஊடகங்களில் பகிரங்கமாக கூறி உள்ளனர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த
சி.த.செல்லப்பாண்டியனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை எஸ்.பி.சண்முக
நாதனுக்கு மாற்றும்படி செய்தாராம் சசிகலா புஷ்பா. பரஸ்பர உதவிகளை சசிகலா
புஷ்பாவும் சண்முகநாதனும் செய்துள்ளார்கள் என்கின்றனர் அதிமுகவினர்
சசிகலா புஷ்பாவிற்கு சாதகமாக செயல்பட்ட அமைச்சர்களும் இப்போது
மிரண்டுக் கிடக்கிறார்களாம். இரண்டு மூன்று அமைச்சர்கள் தனியாகச்
சந்தித்துக் கொண்டால் இந்தக் கதையைத்தான் பேசுகிறார்களாம். அநேகமாக இவர்கள்
தலைகள் விரைவில் உருளலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
முதற்கட்டமாக எஸ்.பி.சண்முகநாதனிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி
பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமைச்சர் பதவிக்கும் ஆப்பு வரலாம் என்கிறது
அதிமுக வட்டார தகவல்கள். சசிகலா புஷ்பா புயல் கரையை கடக்கும் முன்னர்
இன்னும் என்னென்ன நடக்குமோ? என்று அதிர்ந்து போயுள்ளனர் அவருக்கு முன்பு
ஆதரவாக செயல்பட்டவர்கள்
Read more at://tamil.oneindia.com
Read more at://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக