புதன், 17 ஆகஸ்ட், 2016

நம்பூதிரியும் நாயரும் கூட்டு கொள்ளை? ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் 186 கோடி தங்கம் திருட்டு ... Rs 186 crore Gold missing from Kerala's Sree Padmanabha Swamy ...


ரூ.186 கோடி தங்க குடத்தில் கை வைத்தது யார்? பத்மநாப சுவாமி கோவிலில் தொடரும் சர்ச்சை& புதுதில்லி:திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி
கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமாகியுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க குடங்கள் மாயமானது எப்படி என்ற விவரத்தை கண்டுபிடித்து, அதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என,பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள், ஆபரணங் கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதுதொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட் டின் கண்காணிப்பில் நடக்கிறது. நகைகள் திருடு போனதாக எழுந்த புகாரையடுத்து, தணிக்கை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினேத்ராய் தலைமையிலான கமிட்டியை, சுப்ரீம் கோர்ட், நியமித்தது.இக்கமிட்டி, தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கோவிலில் இருந்த, 186 கோடி ரூபாய் மதிப்புள்ள, 769 தங்க குடங்களை காணவில்லை. நகைளை உருக்கி, சுத்திகரிக்கும் போது, 2.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரிடம் இருந்து எஞ்சிய தங்கம்மீட்கப் படா ததால், 59 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கோவிலில், 'பி' அறை, 1990 முதல், 2002 வரை, அந்த அறை, ஏழு முறை திறக்கப் பட்டுள் ளது. நகைகளை படம் எடுத்து ஆவணப் படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான படங்களும்,அதற்கான, 'பிலிம்'களும் இல்லை.விலை< மதிப்பு மிக்க நகைகள் இருப்பதால், கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். நகைகளை அனைவரும் பார்க்கும்படி, அருங் காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 'தங்க குடங்களை திருடியவர் களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை: