சனி, 20 ஆகஸ்ட், 2016

BOFTA சாரு நிவேதா: உலகின் மிகச்சிறந்த திரைப்பட கல்லூரியில்...

கடந்த சனிக்கிழமை முதல் வகுப்பு எடுத்த பிறகு இன்று இரண்டாவது வகுப்பு.  காலை 11.15க்கு ஆரம்பித்தது வகுப்பு.  Empire of the Sun மற்றும் The Artist ஆகிய இரண்டு படங்களை முன்வைத்து மாணவர்களுக்கு சினிமா பற்றி கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே இலக்கியமும் இசையும் வாழ்க்கையும்.  ரொம்ப உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.  ஒரு கட்டத்தில் கல்லூரியின்/ வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து மாணவர்கள் லஞ்சுக்குப் போக வேண்டும், அடுத்த வகுப்பு இரண்டு மணிக்கு இருக்கிறது என்றதும்தான் எனக்கும் என்னைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் காலப் பிரக்ஞையே வந்தது.  மீதியை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்று விரிவுரையை நிறுத்தினேன்.
தனஞ்சயனின் BOFTA திரைப்படக் கல்லூரியில் திரைப்பட ரசனை பற்றி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போதைக்கு இயக்குனருக்காகப் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம்.  செப்டம்பரில் திரைப்பட ரசனைக்காகவே ஒவ்வொரு வார இறுதியும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வகுப்புகள் நடக்கும்.

துறைத் தலைவராக என்னை நியமித்திருக்கிறார்கள்.  நான் எடுக்கப் போகும் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் தயார் செய்து விட்டேன்.  சினிமா தொடர்பான இந்தப் பாடத்திட்டத்தை உலகின் மிகச் சிறந்த திரைப்படக் கல்லூரிகளில் கூட பார்க்க முடியாது.  பெருமைக்காகச் சொல்லவில்லை.  1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்ததால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பது மட்டுமே காரணம்.  பாடத் திட்டத்தில் இந்திய சினிமாவும், தற்காலத்திய சினிமாவும் உண்டு.  முதலில் தினமும் வகுப்பு என்றே திட்டமிட்டோம்.  ஆனால் வேலையில் இருக்கும் பலரும் வார இறுதியில் வைத்தால் தாங்களும் வந்து சேரலாம் என்றார்கள்.  உதாரணமாக, மதுரையில் இருக்கும் ஒருவர் சனி ஞாயிறு மட்டும் சென்னை வந்து வகுப்புக்கு வந்து விட்டு ஞாயிறு இரவு மதுரை கிளம்பலாம்.  ஒவ்வொரு மாதமும் எட்டு நாட்கள் வரும்.  இப்படி ஒரு கோர்ஸ் மூன்று மாதங்கள் போகும்.  மொத்தம் 24 தினங்கள்.  விபரங்களுக்குக் கீழே:
www.bofta.in
PHONE: 044-2472-1234 FAX: 044-2472-5678
MOBILE: +91-90030-78000 /+91-90030-79000
+91-82200-78000 /+91-82201-78000
EMAIL: CONTACT@BOFTA.IN

கருத்துகள் இல்லை: