ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார் ....உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் !


சென்னையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 41 வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீர நடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். 'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை. தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


அவருடைய உடல், திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அண்ணாநகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, டைரக்டர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், சங்கர், பாலா, தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராம், ஜனநாதன், விஜய், ராஜூமுருகன், வெங்கட்பிரபு, நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், பாண்டியராஜன், உதயநிதி ஸ்டாலின், விவேக், கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்கள் அறிவுமதி, சினேகன், விவேகா, யுகபாரதி, இசையமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன்ஷங்கர் ராஜா, தினா, பின்னணி பாடகி சைந்தவி, பட அதிபர்கள் கேயார், ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நா.முத்துக்குமாரின் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பிறகு மாலை 6 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை அண்ணாநகர் நியூஆவடி ரோட்டிலுள்ள வேலன்காடு மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: