புதன், 17 ஆகஸ்ட், 2016

கமாண்டன்ட் பிரமோத் குமார் இது ஒரு முக்கியமான் நாள் என்று பேசிய சில நிமிடங்களில் தீவிர வாதிகளின் குண்டு வீச்சுக்கு பலியானார்

இது மிகவும் முக்கியமான நாள்’ போலீஸ் அதிகாரி கடைசி பேச்சு: சில நிமிடங்களில் தீவிரவாதிகள் குண்டுக்கு பலியானார் 
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று முன்தினம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இதனை முன்னிட்டு 49வது பட்டாலியன் சிஆர்பிஎப் கமாண்டன்ட் பிரமோத் குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய கமாண்டன்ட் பிரமோத் குமார், “இந்தியா 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு படையினருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்களை நாம் திறமையாக சமாளிக்க வேண்டும்” என்றார். தனது உரையை முடிப்பதற்கு முன்பாக தனது கை கடிகாரத்தை பார்த்த அவர் “இது மிகவும் முக்கியமான நாள் ஆகும்” என்றார்.


இதனைத்தொடர்ந்து நவ்ஹட்டா பகுதியில் தீவிரவாதிகள் கண்ணிவெடி புதைப்பதாக சிஆர்பிஎப் கட்டுப்பாட்டு அறைக்கு  தகவல் கிடைத்தது. உடனடியாக பிரமோத்குமார் தலைமையிலான வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து தாக்குதலுக்கு வீரர்களும் தயாராகினர். கமாண்டன்ட் பிரமோத்குமார் முதலில் சென்றதால் அவரது கழுத்தில் குண்டுபாய்ந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் வீரமரணம் அடைந்தார். பாட்னாவை சேர்ந்த பிரமோத்குமார் கடந்த 1998ம் ஆண்டு துணை ராணுவத்தில் இணைந்தார். 2014ம் ஆண்டு அவர் நகரில் பணியமர்த்தப்பட்டார். சமீபத்தில் கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றவர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றபோதும் அவர் ஜார்கண்டில் வசித்து வந்தார். தினகரன்.com

கருத்துகள் இல்லை: