மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை” என பிரபல
ரத்த கொடையாளர் ட்விட்டர் தளமான பிளட் டோனர்ஸ் இந்தியாவின் ட்விட்
சர்ச்சைக்குள்ளானது. ரத்தம் பெறுவதிலும் கொடுப்பதிலும் மட்டும் தான் யாரும்
சாதி பார்ப்பதில்லை என இந்திய சமூகத்தின் சாதியம் குறித்து பேசும்போது
சொல்லவதுண்டு. இப்போது அத்தகைய சிந்தனையிலும்கூட சாதியம் நுழைந்துவிடும்
போலிருக்கிறது. சாதியை வைத்து ரத்தம் வாங்கினால் என்ன என்று சிந்திக்கவும்
அதை செயல்படுத்தி பார்க்கவுமான சோதனை ஓட்டமாக இந்த ட்விட்டைப் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எழுந்த கண்டனம் காரணமாக இந்த ட்விட்
நீக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்விட்டர் தளத்தின் நிர்வாகி இந்தத் தவறான
ட்விட்டுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். /thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக