தமிழக ஆளுநராக கர்நாடக மாநிலத்தவரை நியமிக்க ஜெயலலிதா எதிர்ப்பு?
தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் சட்ட மேலவை உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த சங்கரமூர்த்தியை ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கலாம் என்று அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா பரிந்துரை செய்துள்ளார்.
எனவே தமிழக ஆளுநராக சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் சங்கரமூர்த்தியை நியமிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி பிரச்சனை உள்ளதால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என்றும், குஜராத் மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஆனந்திப் பென் பட்டேலை தமிழக ஆளுநராக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது .நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக