எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்று தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை-
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அறக்கட்டளையின் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித் துள்ளார். இறப்பதற்கு முன்பே, தனக்குப் பிறகு தனது சொத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட தனது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கு செல்லக் கூடாது என உயில் எழுதி வைத் தார் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார். தனக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அறக்கட்டளை சொத்தாக ஆக்கப் பட்டு அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தர்ம காரியங் களுக்கு செலவிட வேண்டும் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, அவர் உயிரோடு இருக்கும்போதே ‘எம்.ஏ.எம்.ராம சாமி
செட்டியார் செட்டிநாடு அறக் கட்டளை’யை நிறுவியதுடன் அதன் தலைவராக ஸ்பிக்
சேர்மன் ஏ.சி.முத்தையா செட்டியாரை யும் நியமித்தார். இந்நிலையில்,
அறக்கட்டளை சம்பந்தமான தர்ம காரியங்களுக்குச் செலவிட நிதி தேவைப்படுவதால்
ராமசாமி செட்டியாருக்கு சொந்தமான சொத்துகள் சிலவற்றை விற்க முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செட்டிநாடு அரண் மனை வட்டாரத்தில் இருந்து
பேசியவர்கள், “அறக்கட்டளைக்கு வருமானம் வரக்கூடிய இனங்களில் எல்லாம்
சுவீகார புதல்வர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தாவாக்களை ஏற் படுத்தி
வைத்திருக்கிறார். அதனால், அறக்கட்டளை நிர்வாகச் செல வினங்களுக்கு நிதி
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்சமயம் குதிரை பந்தயம் மூலம் வரும்
வருமானத்தை மட்டுமே வைத்து செலவுகளை சமாளிக்கிறார்கள்.
அரண்மனையில் எம்.ஏ.எம். வசித்து வந்த பகுதியையும் தற் போது
முத்தையா தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார். அதனால், ஆகஸ்ட் 5-ம்
தேதி எம்.ஏ.முத்தையா செட்டியார் பிறந்த நாள் வந்தபோதுகூட எங்களால்
அரண்மனைக்குள் சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்ய முடியவில்லை.
இந்நிலையில், செப்டம்பர் 6-ல் குமாரராஜ முத்தையா
செட்டியார் பிறந்தநாள் விழா, செப்டம்பர் 30-ல் ராஜா சர் அண்ணாமலை
செட்டியார், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் பிறந்தநாள் விழாக்கள், அக்டோபர்
11-ல் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி மற்றும் சிகப்பி ஆச்சி பிறந்தநாள்
விழாக்கள் வர உள்ளன. இந்த விழாக்களின்போது நல உதவிகள் வழங்க நிதி தேவைப்
படுகிறது. அதற்காகத்தான் சொத்து களை விற்கும் முடிவுக்கு வந்
திருக்கிறார்கள்’’ என்றனர்.
ஏ.சி.முத்தையாவிடம் இது குறித்து கேட்டபோது, “செட்டிநாடு
சிமென்ட்ஸ் நிறுவனத்தில் எம்.ஏ.எம்-க்கு 25 சதவீத பங்குகள் உள்ளன. அதை
விற்றால் ரூ.700 கோடி கிடைக்கும். அத்துடன் கர்நாடக மாநிலம் கூர்க்கில்
உள்ள 70 ஏக்கர் காபி தோட்டம், சென்னை எம்.ஆர்.சி.நகரில் 15 கிரவுண்ட்
நிலம், அதே பகுதியில் இருக்கும் மெய்யம்மை டவர்ஸில் உள்ள 3 ஃபிளாட்டுகள்
இவைகளையும் விற்க முடிவு எடுத்திருக்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விற் றால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்
கிடைக்கும். உடனடியாக இவற்றை எல்லாம் விற்றுவிட முடியாது என்றாலும், தனது
சொத்துகளை தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும் என்ற எம்.ஏ.எம்-மின் கடைசி
ஆசையை பூர்த்திசெய் வதற்காக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்
சொத்துகளை விற்க தீர்மானித் திருக்கிறோம்’’ என்றார்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தில் ஒரே சமயத்தில் இவ்வளவு தொகைக்கான சொத்துகள் இதுவரை விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குள.சண்முகசுந்தரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக