திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கவிஞர் நா. முத்துகுமார் .. குடிக்காதீர்கள்.. ! இல்ல பாஸ் எப்பவாச்சும்தான்..... இனி யார் யாருக்கு ஆறுதல்?

கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி கவிஞர் மகுடேசுவரன் : நம்மூர் மதுவை உண்டீர்களெனில் நாற்பதைத் தாண்ட மாட்டீர்கள். நாற்பதைத் தாண்டியும் குடிக்கிறீர்களென்றால் நாளையைத் தாண்டுவீர்களா, தெரியாது ! உள்ளுறுப்புகளுக்கு என்ன தொற்று, என்ன நிலைமை என்பதைப் போதையால் உணர முடியாது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
‘குடிக்காதீர்கள்’   என்று நான் கேட்டுக்கொண்ட ஆயிரம் பேரில் அவரும் ஒருவர். “இல்ல பாஸ்... எப்பவாச்சும்தான்” என்று அவர் ஆறுதல் கூறுவார். இனி யார் ஆறுதல் கூறுவது ?முகநூல்  பதிவு ,


Kathir Krishnamurthi   மஞ்சக்காமாலை ஆற 90 நாளுக்கு மேல ஆச்சு. மிகவும் பத்தியமாக இருக்க வேண்டும். நாக்கு அடங்காமல் எதையாவது சாப்பிட்டு பிறகு பழையபடி கல்லீரல் வீங்கும். சிறு நீரில்கூட மஞ்சள் பித்தம் கலந்துபோகும். காவலுக
்கும் ஆள் இல்லை. அன்னையும் பணிக்கு செல்ல் வேண்டும். சமையல் அறையைத் தாழிட்டு பூட்டி விடுவார்கள்...பத்திய உணவும் பிடிக்காது. அதுக்குமேல கீழாநெல்லிக்கீரைய அரைச்சு சாப்பிடனும். .கவி முத்துக்குமாரின் மரணமும் பட்டுக்கோட்டையார் போன்றதே..உணவில் வயிரஸ் கலந்து இருக்கலாம்.. hஇதைப்பற்றி நாம் விழிப்புடன் இருப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலி என்று சுப உதயக்குமார் எழுதியுள்ளார்......கழிப்பறையில் நம்மூரில் கவனமாக இருக்க. உறவினர் ஒருவர் மருத்துவர் கோவையில்...அந்தம்மா ஜி.டி நாயுடு ஆசுப்பத்திரியில பணியாற்றுனாங்க..ஹிப்பட்டைடிஸ் தாக்கி கல்லீரல் செயலிழந்து இறந்தாங்க....ஒரு கெட்ட பழக்கமும் இல்லை...குடிப்பழக்கம் உறக்கமின்மை வேலைப்பளு எல்லாம் கிருமியை எதிர்த்து வினையாற்றி வீழ்த்தி குணமடைய தடைக்கல்லாக இருக்கின்றன. குடிப்பழக்கம் மட்டும் 40 அகவையில் கல்லீரலை பதம்பார்க்காது...மருத்துவ மனையில் உள்ள செவிலியர் மற்றும் மருத்துவர்களும் ஹெப்பட்டைடிஸ் கிருமியின் தாக்குதலுக்கு ஆள் ஆக வாய்ப்புகள் அதிகம்..

கருத்துகள் இல்லை: