ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சலோஉனா சுதந்திர யாத்திரைக்கு அமெரிக்க அம்பேத்கரிய அமைப்புகள் ஆதரவு


thetimestamil.com : குஜராத்தின் உனா நகரில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சலோ உனா சுதந்திர யாத்திரையை தலித் அமைப்புகள் கடந்த பத்து நாட்களாக நடத்தி வருகின்றன. குஜராத்தின் பல ஊர்களைக் கடந்து இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 இந்த யாத்திரை உனா நகரில் முடிவடைகிறது. யாத்திரைக்கு இஸ்லாமிய, இடதுசாரி அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் அம்பேத்கரிய அமைப்புகள் உனா யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் வசிக்கும் ஊர்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூஜெர்ஸி, நியூயார்க், பாஸ்டன், டெட்ராய்ட், சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் வட அமெரிக்க அம்பேத்கர் அசோசியேஸன் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் போராட்டங்கள் நடைபெற்றன.


ஐக்கிய அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடந்த ஆதரவு போராட்டம்

California, San Francisco - Solidarity and support to ‪#‎ChaloUna‬ from Ambedkarites Sikhs, Muslims, Progressives and Dalits. #ChaloUna diaspora standing and marching with placards in cross junctions, malls exposing atrocities on Dalits and minorities in India, to a global audience who takes caste nonsense very seriously. Modi should either act or resign. Period.
AmbedkarAssociation North America

149

2

வீடியோவில் போராட்டக் காட்சி…

கருத்துகள் இல்லை: