சனி, 20 ஆகஸ்ட், 2016

பூஜ்ஜியம்! கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன் மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமை தீர்ப்பாயம் சூடு

புதுடில்லி:''கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கங்கையில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க எடுத்துள்ளதாக கூறப்படும் நடவடிக்கைகளின் பலன் பூஜ்ஜியமே; மத்திய, மாநில அரசுகளும், தொடர்புடைய அமைச்சகங்களும், கங்கை துாய்மையை முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை,'' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மத்தியில் அமைந்த பின், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு, முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.   நாராயணா இந்த தண்ணியை தானே போஸ்ட் ஆபீஸ்-இல வாங்கி குடிக்கிறீங்க...... நல்லா குடிங்க...... நியூட்ரல் ஆகவே போயிடுவீங்க........


இந்நிலையில், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டம் குறித்து, வழக்கறிஞர் எம்.சி.மேத்தா என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில், அவர் கூறியுள்ள தாவது:

கங்கை நதிக் கரையோரம் உள்ள தொழிற் சாலை கழிவுகள், கங்கையில் கலப்பதை தடுக்க வேண்டும். அதற்கு, தொழிற்சாலைகள் குறித்த கணக்கெடுப்பை முதலில் எடுக்க வேண்டும்.கங்கை துாய்மை குறித்து, கடந்த, 1987ம் ஆண்டு முதல், சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், சரியான நடவடிக்கைகளை எடுக்காததால், கங்கை கரையோரத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

தொழிற்சாலைகள் குறித்து, தகுந்த கணக் கெடுப்பு நடத்தி, அவை கங்கையில் கழிவு களை கலப்பதை தடுக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை விசாரணைக்கு
ஏற்ற, தேசிய பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், மத்திய அமைச்சகங்களு க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இவ்வாறு, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, உ.பி., உள்ளிட்ட மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள், பல்வேறு அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு, தீர்ப்பாயம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், இரு வாரங் களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய, கடைசி வாய்ப்பு அளிப்பதாகவும் அமர்வு குறிப்பிட்டது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

'எங்களுக்கு ஆர்வம் உள்ளது!'நேற்று நடந்த விசாரணையின் போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு கூறியதாவது: ஒவ்வொருவரும் எங்களிடம், நாங்கள் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால், அதன் பலன் பூஜ்ஜியமே.
எங்களுடைய முதல் மற்றும் முக்கிய கேள்வி, ஹரித்துவார் - கான்பூர் இடையே, கங்கையை எப்படி பாதுகாக்கப் போகிறீர்? அதற்கு உங்களுடைய திட்டம் என்ன?

இது, மிகவும் முக்கியமான பிரச்னை என்பதை மட்டும் கூறுகிறீர். அதற்கான தீர்வு என்ன? நாங்கள் பலமுறை உத்தரவிட்டும், இதுவரை ஒன்றும் செய்யவில்லை.மாநில அரசுக்கு பல்வேறு முக்கிய பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு இதுதான்மிகவும் முக்கியமான பிரச்னை. கங்கை துாய்மை அடைய வேண்டும் என்பது தான், எங்களுடைய நோக்கம். இரு வாரங்களுக்குள், கங்கை நதி துாய்மை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கங்கை துாய்மை திட்டத்திற்கு இதுவரை, பெரியள வில் நிதி ஒதுக்கப்பட்டதாகவோ, செலவிடப்பட்ட தாகவோ தெரியவில்லை. மேலும், தொழிற்சாலை கழிவுகள் கங்கையில் கலப்பதை தடுக்க, அவற்றை கண்காணிக்க, ஒரு அடி கூட எடுத்து வைக்க வில்லை. இவ்வாறு அமர்வு கூறியது.

முந்தைய உத்தரவுகள் :
கங்கை துாய்மை குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், இதற்கு முன் பிறப்பித்த பல்வேறு
உத்தரவுகள்:
* கோமுக்கில் இருந்து ரூர்கி வரையில், வெள்ள தடுப்புக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, உத்தரகண்ட் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது
* கங்கை துாய்மை திட்டத்திற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தேசிய கங்கை துாய்மை இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது
* கங்கை கரையோரத்தில் ஏற்படுத்தப்படும் மாசுவை தடுக்க எடுத்துள்ள மற்றும் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய, ஜார்க்கண்ட், பீஹார், மேற்குவங்க மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது
* கங்கை துாய்மை திட்டத்தையும், பல்வேறு பிரிவுகளாக தீர்ப்பாயம் பிரித்திருந்தது. கோமுக் - ஹரித்துவார்; ஹரித்துவார் - கான்பூர்; கான்பூர் - உ.பி., எல்லை; உ.பி., எல்லை - ஜார்க்கண்ட் எல்லை; ஜார்க்கண்ட் எல்லை - வங்கக் கடல் என, இந்தப் பகுதி களில் துாய்மைப் பணிகளை, அந்தந்த மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, பல்வேறு உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தன.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: