புதன், 26 செப்டம்பர், 2012

உதயகுமாருடன் கைகோர்த்த வைகோ? உருப்படாத கூட்டணி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை சென்று போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சந்தித்து பேசினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர்.
மேலும் இடிந்தகரை ஆலயம் முன்பு மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 மக்கள் போராட்டம் ஒரு புறம் இருக்க மறு பக்கம் மின் உற்பத்தியைத் துவங்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை சென்றார். அங்கு அவர் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அணு சக்திக்கு எதிரான அரசியல் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை இடிந்தகரையில் நடக்கிற்து. இதில் அடுத்தக் கட்ட போராடட்ம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: