Viruvirupu.com
அவருக்கு ஒன்று, இவருக்கு ஒன்று!
தி.மு.க.-வினர்
மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்து, அவசர செயற்குழு
கூட்டத்தை கூட்டுகிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. தி.மு.க. செயற்குழு
அவசர கூட்டம், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அக்டோபர் 1-ம் தேதி
(திங்கட்கிழமை) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
எதற்காக இந்த அவசர கூட்டம் என்ற கேள்விக்கு பதிலளித்த தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், “முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மீது, பொய் வழக்குகளை ஜோடித்து, குண்டர் சட்டத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்து வருகிறது இந்த அரசு.அப்படி செய்வதால், விரைவில் வரவுள்ள நாடாளுமன்றம், கூட்டுறவு தேர்தல் போன்றவற்றில் எளிதாக வென்றுவிடலாம் என்று அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. இதங்கு தி.மு.க. தரப்பில் என்ன பதில் நடவடிக்கை எடுப்பது என்பதை ஆராயவே செயற்குழு அவசர கூட்டம் கூட்டப்படுகிறது”
சரி. இதன் பின்னணியில் உள்ளது, முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரமா?
ஏனென்றால், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டபோதும் இப்படி ஓர் ஆலோசனை நடைபெற்றது. கட்சி தம்மைக் கண்டுகொள்ளவில்லை என்று வீரபாண்டியார் மனவருத்தம் கொண்டதால் அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்பது எமக்கு கிடைத்த தகவல்.
அவருக்கு ஆலோசனை கூட்டம் போட்டுவிட்டு, பொன்முடியை அம்போ என்று விட்டால், ஸ்டாலின் சும்மா விடுவாரா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக