Viruvirupu
முன்னாள்
ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை வரும் ஜனவரி
13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும்
சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக
பதவி வகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில்
அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டடிருந்தது, ஒன்றும் பெரிய ரகசியமல்ல. அவர்
ஓய்வு பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்பட்ட வீட்டிற்கு அரசுப் பணத்தை
செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார்.சுருக்கமாக சொன்னால், ‘வாழ்க்கையில் ஒருமுறை கிடைத்த சான்ஸை’ முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மேக்ஸிமம் எடுக்க கூடியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார்.
ஜாலிலோ ஜிம்கான இவரை ஏன்தான் தெரிவு செய்தனரோ
பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு எடுத்து சென்ற விவகாரம் தகவல் தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் செய்த முயற்சியால் வெளிப்பட்டது.
இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை கேட்டுக்கொண்டுள்ளது.
பரிசு பொருளை பிரதீபா கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார்.
பிரதீபா பாட்டில் ஆராய்ச்சி ஏதும் செய்வதாக தகவல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக