கி.வீரமணி அறிக்கை!
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் கொடுமையை மாநிலங்கள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது
என்றாலும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு மிகப் பெரிய பார்ப்பனீயத்தைச்
செய்து வருகிறது.
இளநிலை மருத்துவக்
கல்லூரிகளில் (எம்.பி.,பி.எஸ்.,) இரு பால் மாணவர்களைச் சேர்த்திட அகில
இந்திய அடிப்படையில் தேசிய நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துகிறது இந்திய
மருத்துவக் குழு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 விழுக்காடு இடங்களை
மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப நுழைவுத்
தேர்வு நடத்துகிறது.
இந்திய அளவில் இவ்வாறு
எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 2503 (தமிழ்நாட்டில் இருந்து எடுத்துச்
செல்லப்படும் இடங்கள் 320). நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக்
கல்லூரியில் சேர்க்கப்படும் இந்த இடங்களில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு 15
விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடு மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால்,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்கிற கொடுமையை
எண்ணிப் பார்க்க வேண்டும்
.இந்த 2503 இடங்களில் திறந்த போட்டிக்கான இடங்கள் (பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்) 1848. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 364 இடங்கள். பழங்குடி மக்களுக்கு 181 இடங்கள் கிடைக்கும். 27 விழுக்காடு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 675 இடங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ வெறும் 37 இடங்கள் மட்டும்தான். அதாவது ஒரே ஒரு சதவிகிதம்தான். 27 சதவிகிதம் எங்கே? ஒரு சதவிகிதம் எங்கே? இதே போல மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மற்றும் டிப்ளோமா வகுப்பில் (எம்.டி., எம்.எளி., போன்றவை) சேர்வதற்கும் அகில இந்திய அளவில் ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாநிலத்தி லிருந்தும் 50 விழுக்காடு இடங்கள் மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 1000. இதிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லை.இந்தக் கொடுமையை அனுமதிக்கலாமா? போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை மத்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசின் துணையோடு வஞ்சகமாக, சட்ட விரோதமாக வழிப்பறி செய்யும் ஒரு வேலையில் இறங்கி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டாமா?இதில் மேலும் ஒரு கொடுமை என்ன தெரியுமா? இப்போதுள்ள நிலையில் முதுநிலை மருத்துவம் படிப்பதற்கு பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது; இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதால் ஒரே ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்று சமாதானம் சொல்லப் படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது நியாயந்தானே என்று நினைக்கக் கூடத் தோன்றும்.
இதாவது உண்மையா? இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு டில்லியில் உள்ள எய்ம்ளி, சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் இவற்றுக்குப் பொருந்தாதாம். இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.
எப்படிப்பட்ட மோசடியான - தந்திரமான அணுகு முறைகள் பார்த்தீர்களா?டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் படிக்கும் (எம்.பி.,பி.எளி.,) மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு 30 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டுமாம்! நுழைவுத் தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப் பட்டவர்களோ பெறாத பட்சத்தில் அந்த இடங்களும் திறந்த போட்டிக்குக் கொண்டு போகப்படுகின்றன.இளங்கலை மருத்துவக் கல்லூரியில் சேர மத்திய தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் போக மீதி இடங்கள் +2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் இருபால் மாணவர்களும் சேர்க்கப் படுகின்றனர். தமிழ்நாட்டில்தான் நுழைவுத் தேர்வு கிடையாதே. இப்பொழுது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இனி அந்த இடங்களுக்கும் சேர்த்து இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வை நடத்துவார்களாம். மாநில உரிமைகளைக் கேள்வி கேட்பாரின்றி அபகரித்துக் கொள்ளும் அநியாயம் அல்லவா இது?என்ன கொடுமை இது! விழித்திருக்கும் பொழுதே விளையாடும் போக்கிலித்தனமான செயல் பாடுகளை முறியடித்தாக வேண்டும். தாழ்த்தப்பட்டவர் களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளித்து, பிற்படுத்தப் பட்டோருக்கு அளிக்காதது பிரித்தாளும் சூழ்ச்சியாகும். இதற்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, இட ஒதுக்கீட்டில் தலைக்கு மேல் தொங்கும் கொ(டு)லை வாளினை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு அறவேயில்லை என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கான சமூக நீதி உணர்வை வெளிப்படுத்தவேண்டும்.<அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் (சமூக நீதி உணர்வில் யாருக்கும் சளைத்தவர் அல்லர் கலைஞர் அவர்கள்.) இதில் தலையிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்./>மூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அடுத்து அனைவரையும் ஒன்று திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக