புதன், 26 செப்டம்பர், 2012

தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு ஒரு படம் வருமா?

சென்னை: பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே போன்று தமிழிலும் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் படம் ரிலீஸானால் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி யாரப்பா ஹீரோன்னு தான். படத்தைப் பற்றி செய்தி வெளியிடும்போதும் சரி, பேசும்போதும் சரி கமல் படம், அஜீத் படம், ரஜினி படம், விஜய் படம் என்று ஹீரோக்கள் பெயரைத் தான் சொல்கிறோம். ஒரு நாளும் இது இந்த நாயகியின் படம் என்று பேசுவதில்லை.
ஆனால் பாலிவுட்டில் அப்படி அல்ல. அங்கு ஹீரோயின்கள் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். ஹீரோயினை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க தென்னிந்தியாவில் யாருக்குமே தோணாத நேரத்தில் பாலிவுட்டில் ஏக்தா கபூர் வித்யா பாலனை வைத்து தி டர்ட்டி பிக்சர் தயாரித்தார். படத்தில் நசிருத்தீன் ஷா என்ற ஜாம்பவான் இருந்தாலும் வித்யா தான் ஹீரோ. தற்போது கரீனா கபூரை வைத்து ஹீரோயின் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா சோப்ராவை மையமாக வைத்து பேஷன் படம் வெளியானது.
இது ஏன் நம்ம தெலுங்கில் கூட அனுஷ்காவை வைத்து அருந்ததி படத்தை எடுத்தார்கள்.
இதே போன்று தமிழ் திரையுலகிலும் ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் ஹீரோயின்கள் ஹீரோவாகும் நாளும் எந்நாளோ?

கருத்துகள் இல்லை: