பாரத ரத்னா விருது பெற்றவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு Elder Statesman ஆக இருப்பதுதான் மரபு. கலைஞரை நோகாமல் கட்சி தலைவர் பதவியில் இருந்து அகற்றவும், மீண்டும் முதல்வர் ஆகாமல் தடுக்க எடுக்கப்படும் முயற்சியாக இந்த வேண்டுகோள் இருக்கிறது. இப்படிபட்ட விருதுகளுக்கு கலைஞர் அப்பாற்பட்டவர்
டெல்லி: திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா
விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.
தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்டுகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக