தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80
சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை
சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில்
இதுவரை இல்லாத அளவு படுதோல்வியான ஆட்சியை இதுவரை யாரும்
பார்த்ததில்லை. இதில் வேறு 40 க்கு 40 வேறு வேண்டுமாம். ஒருவேளை மக்கள்
இளிச்ச வாயர்கள் என்ற நினைப்போ?
இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.
அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக